முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன உறுதி என்பது உறுதியான – முடிவான – வலுவான மனவிருப்பம் என்கிற பண்பு நலனாகும்

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

மன உறுதி என்பது உறுதியான – முடிவான – வலுவான மனவிருப்பம் என்கிற பண்பு நலனாகும். மனஉறுதியினால் நெருக்கடியையும், பெருங்கேட்டையும், துன்பத்தையும் கண்டு பின்வாங்காமல் துணிச்சலுடனும், உறுதியுடனும், மனவலிமை யுடனும் சமாளிக்க முடியும். நடைபெறுகிற நிகழ்ச்சிகளிலோ, சூழ்நிலைகளிலோ முடங்கிப் போய்விடாமலும், அழிந்து போய்விடாமலும் எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது. ஒருவர் தமது குறிக்கோளை வெற்றிகரமாக அடைவற்கு உதவுவது மனஉறுதி.

எதிர்பாராத பாதிப்புகள் தாக்குகிறபோது பொறுமையுடனும், மனவலிமை யுடனும் அதனை எதிர்கொள்வதற்கு மனஉறுதி ஒருவரைப் பண்படுத்துகிறது. மனசக்தியை வழங்குவது மனஉறுதிதான். எல்லாவிதமான விளைவுகளையும் எப்படிப்பட்ட நெருக்கடிகளையும் சந்திக்கின்ற உறுதியை உருவாக்குகிறது. நெருக் கடிகள் ஏற்படும்போது மனம் சோர்ந்து விடாமல் சமமாகப் பாவித்து அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

இடுக்கண் ஏற்படுகிறபோது அதைப் பார்த்துப் புன்னகையை வீசுகிற கொடையையும், தனி நபருக்கு எதையும் தாங்கும் சக்தியையும் வழங்குவது மனஉறுதிதான். மனஉறுதி ஒருவர் உள்ளத்தைத் தன்னம்பிக்கையினால் நிரப்புகிறது. வாழ்வில் சோதனைகளைச் சந்திக்கிற துணிச்ச லைக் கொடுக்கிறது. தன்னம்பிக்கையினையும், மனமுதிர்ச்சியையும், மனநிறைவினை யும் வளர்ப்பது மனஉறுதிப் பண்புதான். இதனால் ஒருவர் துணிச்சல் மிக்கவராகி அமைதி பெறுகிறார்.

மனஉறுதிக்கு மறுபெயர் சவுந்தர்ராஜன் : திருநெல்வேலி மாவட்டத்தில் மாடன் நாடார் குக்கிராமத்தில் பிறந்தவர் சவுந்தர்ராஜன். அவரது மூன்றாவது வயதில் நிகழ்ந்தது ஓர் சைக்கிள் விபத்து. வலது காலை இழந்தார். செயற்கைக்கால் பொருத்தப்பட்டது. சக மாணவர்போல் விளையாட முடியாத ஏக்கம். சாதிக்க வேண்டும் என மனவுறுதி கொண்டார். கடும் பயிற்சி செய்தார். 1991-இல் சைக்கிள் பயணம் தொடங்கினார். 1750 கிலோ மீட்டர் தூரத்தை 140 மணி நேரத்தில் கடந்தார். கின்னசின் பாராட்டைப் பெற்றார்.

திருப்தி அடைந்துவிடவில்லை அவர்! இந்தியா முழுவதும் 27,500 கிலோ மீட்டர் தூரத்தை 19 நாள் இரவு பகலாக சுற்றித் தேசிய சாதனை படைத்தார். அசாம் சென்றபோது தனியே தீவிரவாதிகளிடம் சிக்கினார். “துணிவுடன் என் சாதனைகளை எடுத்துக் கூறாமல் விட்டிருந்தால் என்னைக் கொன்றிருப்பார்கள்” என்று தமது மனஉறுதிக்குச் சான்று பகர்கிறார். 26 வயது நிறைந்த இந்த இளைஞர் நீச்சலில் பெல்ஜியத்தில் பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்தியத் தேசியப் போட்டி களிலும் 1990– 1995 வரை தொடர்ந்து தங்கப்பதக்கங்கள் பெற்றார். மனஉறுதிக்கு மறுபெயர் சவுந்தர்ராஜன்.

மனஉறுதியைப் பழக்கிட வழிமுறைகள் : வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கை தரும் கண்ணோட்டத்தை வளர்த்தல், எதிர் மறையானவை ஏற்படும் போது அமைதியாக ஏற்றல், தொடர்ந்து சகிப்புத் தன்மை யுடன் பின்னடைவு பற்றிக் கவலைப்படாமல் இரகசியத்தை அடைய முயலுதல், மனதுக்கும் அறிவுக்கும் சமநிலை பேணி வருதல், தோல்விகளால் துவளாமல் துணிச்சலுடன் ஏற்றல், அநீதியான தண்டனை விளைவுகளை எதிர்கொள்ளல், சொந்த மனக்குறைகளைப் பெரிதுபடுத்தாமல் விடுதல், தனது சொந்த ஈடுபாடுகளை யும் பிறருக்காக விட்டுக்கொடுத்தல், நெருக்கடிகளைச் சந்திப்பதற்கு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுதல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து