முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றிட வேண்டும்: அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா அறிவுறுத்தல்

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      சேலம்

சேலம் மாவட்டம் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஹன்ஸ் ராஜ் வர்மா தலைமையில் 11.10.2017 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் ரோஹிணி ரா. பாஜிபாகரே முன்னிலை வகித்தார்.

விழிப்புணர்வு பணி

 

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மேம்பாட்டுப் பணிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பருவ நிலை மாற்றத்தின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளுவது தொடர்பான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு துரிதப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் சேலம் ஊரக பகுதிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பொது சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறையைச் சேர்ந்த மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள், மலேரியா தடுப்பு களப்பணியாளர்கள், கொசுப்புழுவை கண்டறிந்து அகற்றுபவர்கள், சுகாதார அலுவலர்கள் , சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து, தொய்வின்றி பணியாற்றிட வேண்டும். தாங்கள் மேற்கொள்ளுவது பணி என்று பாராமல் பிற உயிர்களை காப்பாற்றும் பணி என்பதை கருத்தில் கொண்டு, அனைவரும் பணியாற்றிட வேண்டும்.

மேலும் பருவநிலை மாற்றத்தின் போது தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதோடு, பொதுமக்களிடையே நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்த விவரங்களை, தெளிவாக விளக்கிட வேண்டும். குறிப்பாக டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி, பொதுமக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அனைத்து துறைகளோடு ஒருங்கிணைந்து தீவிர தொற்று நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு மட்டுமல்லாமல், துறைகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றங்கள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட வேண்டும். களப்பணிகளில் அரசுத் துறைகள் மட்டுமல்லாமல் , ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் மற்றும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்களை ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர், உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடையே நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று, பொதுமக்களையும் இப்பணிகளில் ஈடுபடுத்திட, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முன் வர வேண்டும் என அரசு முதன்மை செயலாளர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் செயற்பொறியாளர் அ.அசோகன், இணை இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை எஸ். உமா, துணை இயக்குநர் பொது சுகாதாரம் கே. பூங்கொடி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் என். கோபிநாத் , உதவி ஆணையாளர்கள் ப.ரமேஷ் பாபு, நா. சத்திய நாராயணன், மு. கணேசன், ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ் , மருத்துவ அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து