முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு பணிகளுக்கு கூடுதலாக 90 புதிய புகை தெளிப்பான்கள்: அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வழங்கினார்

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு பணிகளுக்கு கூடுதலாக 90 புதிய புகை தெளிப்பான்கள் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

புகை தெளிப்பான்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை மூலமாக மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக கூடுதலாக 90 புதிய புகை தெளிப்பான்கள் கருவிகனை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்களிடம் வழங்கினார்.

இதில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர் எஸ்.இராமச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் டாக்டர் மீரா, டாக்டர் கோவிந்தன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எல்.கே.சாந்தா, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வெ.புருஷோத்குமார், தனி அலுவலர் கருணாகரன், மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

மறைந்தும் மறையாமலும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி,

தி.மலை மாவட்டத்தில் டெங்கு போன்ற நோய்கள் பொதுமக்களுக்கு ஏற்படாத வகையில் தடுத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் அரசுத் துறை கட்டிடங்கள், இரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், விடுதிகள், சினிமா திரையரங்குகள், வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில் டெங்குவை உருவாக்கும் ஏடிஎஸ் கொசுக்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்டிகாள்ள மாவட்ட நிர்வாகத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கொசு ஒழிப்பு இயக்கத்தில் சுகாதாரத் துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் ஆகியவற்றின் அலுவலர்கள் ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்றும் நாள் முழுமைக்கும் இப்பணிகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேற்கொண்டு கொசுக்களை ஒழித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த கொசு ஒழிப்பு இயக்கத்தில் விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்தி இந்த இயக்கத்தினை மக்கள் இயக்கமாக மாற்றிட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். மேலும், உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதிகளில் கொசுஒழிப்பு இயக்க நடவடிக்கைகளான புகை மருந்து அடித்தல், பீளிச்சிங் பவுடர் தெளித்தல் போன்ற பணிகளை பொதுமக்கள் யாவரும் கண்ணுறும் வகையில் மேறஸீடிகாண்டு பொதுமக்கள் பங்களிப்புடன் ஏடிஎஸ் கொசுக்களை முற்றிலும் ஒழிக்கபும், அனைத்து பகுதிகளிலும் டெங்கு நோய் பரவுவதை தடுக்கவும், முனைப்புடன் செயல்பட கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த தீவிர ஏடிஎஸ் கொசு ஒழிப்பு இயக்கத்தில் முக்கிய பங்குவகிப்பது புகைத் தெளிப்பான் இயந்திரங்கள் ஆகும். திருவண்ணாமலை மாவட்டம் 18 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 860 கிராம ஊராட்சிகளை கொண்ட பெரிய மாவட்டம் ஆகும். இதனை கருத்திற் கொண்டும் ஏடிஎஸ் கொசுக்களை ஒழிக்க வேண்டிய நடவடிக்கைகளை முடுக்கிவிடும் பொருட்டும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஏற்கனவே இருப்பிலுள்ள புகைத் தெளிப்பான் இயந்திரங்களுடன் கூடுதலாக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் தலா 5 எண்ணிக்கையிலான புகைத் தெளிப்பான்கள் வீதம் மொத்தம் 90 புகை தெளிப்பான்களை வாங்க மாவட்ட ஆட்சியர் பிரத்யேக முயற்சி மேற்கொண்டு உத்திரவிட்டதன் அடிப்படையில் 90 புதிய புகைத் தெளிப்பான்கள் வாங்கப்பட்டு, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் கூடுதலாக தலா 5 வீதம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்த புகை தெளிப்பான்கள் பயன்பாட்டுக்கு தேவைப்படும் எரிபொருளான பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை தேவையின் அடிப்படையில் வாங்கி பயன்படுத்திட அவசர அவசியத்தின் பேரில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலிருந்தும் தலா ரூ.1 இலட்சம் முன்பணமாக சம்மந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளில் ஏற்கனவே ஈடுபடுத்தப்பட்டு வந்த 495 மஸ்தூர் பணியாளர்களுடன் தற்போது மாவட்ட ஆட்சியரின் முன்முயற்சியால் அரசினால் கூடுதலாக 457 மஸ்தூர் பணியாளர்கள் ஈடுப்படுத்தப்பட அனுமதிக்கப் பெற்று, மொத்தம் 952 மஸ்தூர் பணியாளர்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பணியமர்த்தப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர்கள் கண்காணிப்பில் ஏடிஎஸ் கொசு ஒழிப்பு பணிகளை ஊரக பகுதிகளில் போர்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து