முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு நாமக்கல்லில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாமக்கல் மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறையின் சார்பில் பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணியும், தீ விபத்தினை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சியும் நேற்று (13.10.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு நாமக்கல் சார் கலெக்டர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்து, தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சியினை பார்வையிட்டார். பேரிடர் மேலாண்மை குறித்து நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கி பேசும் போது தெரிவித்ததாவது,

பேரணி

 

மழை காலங்களில் பேரிடர் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்திடவும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், நாமக்கல் மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறையும், மாவட்ட தீயணைப்பு மீட்புத்துறையும் இணைந்து பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. மழை வெள்ள காலங்களில் மனிதர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் எதிர்பாராதவிதமாக ஏற்படுகின்ற தீ விபத்துகள், சாலை விபத்துக்கள், கட்டிட இடுபாடுகள், இயற்கையின் சீற்றங்களால் ஏற்படுகின்ற புயல், மழை, வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற பல்வேறு பாதிப்புகளிலிருந்தும் செயற்கையாக ஏற்படுகின்ற பேரிடர் பாதிப்புகளிலிருந்;தும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்த விளக்கங்கள் இங்கே செயல்முறை விளக்கங்களாகவும், கருத்துக்களாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் நாமக்கல் மாவட்ட பேரிடர் மேலாண்மை தணிக்கும் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

பள்ளி வளாகங்களில் இதுபோன்ற பேரிடர் மேலாண்மை மற்றும் தீ விபத்தை தடுப்பது தொடர்பான ஒத்திகை பயிற்சியினை நடத்துவதன் முக்கிய நோக்கம் மாணவ, மாணவியர்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இப்பயிற்சியினை பார்த்து பயன்பெற்றுள்ள மாணவ, மாணவியர்களும் தங்கள் இல்லங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வையும், தங்களது பெற்றோர்கள் மற்றும் மற்றவர்களிடத்திலும் எடுத்துக்கூறி இது குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கும் ஏற்படுத்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு நடத்தப்படுகின்றன. பேரிடர் காலங்களில் விபத்துக்களை தவிர்ப்பதற்கும், மழை வெள்ள காலங்களில் குழந்தைகள், பெரியவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும், எதிர்பாராத விதமாக ஏற்படுகின்ற தீ விபத்து நேரங்களில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்தும் தீயணைப்பு மீட்புப் பணித்துறையின் சார்பில் இங்கே விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதோடு, செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ, மாணவியர்கள் நன்கு அறிந்து கொண்டு பேரிடர் காலங்களில் தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும், பாதிப்புக்குள்ளாகின்ற பொதுமக்களையும் பாதுகாத்திட முன்வர வேண்டும். பேரிடர் காலங்களில் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்துவதோடு, பேரிடர் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுமையாக கடைபிடித்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.

இந்த பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கு.அழகப்பன், நாமக்கல் மாவட்ட பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் ராஜா, நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உட்பட வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள், ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து