முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் பேரிடர் இன்னல் குறைப்பு குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி : கலெக்டர் கு.ராசாமணி தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      திருச்சி

 

சர்வதேச பேரிடர் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரிடர் இன்னல் குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சி நேற்று (13.10.2017) திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி, தலைமையில் நடைபெற்றது.

 ஒத்திகை பயிற்சி

 பேரிடர் குறைப்பு என்பது இயற்கை சீற்றங்களாகிய புயல், மழை, வெள்ளம், பூகம்பம், சாலை விபத்து, கட்டிட இடிபாடு, மிகப்பெரிய தீ விபத்து, மிக உயரமான கட்டிடங்களில் ஏற்படும் இடர்பாடு ஆகியவைகளால் ஏற்படக்கூடிய இழப்புகளை குறைப்பது என்பதாகும். சர்வதேச பேரிடர் தினத்தையொட்டி, பேரிடர் இன்னல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 13ம் தேதி பேரிடர் குறைப்பு தினத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று (13.10.2017) தீயணைப்பு துறை மூலம் எதிர்பாராத விபத்துகள் ஏற்படும் போது அதில் பொதுமக்களை எப்படி மீட்பது, பொதுமக்கள் விபத்திலிருந்து எப்படி தங்களை காத்துக் கொள்வது குறித்து மாவட்ட வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விபத்து ஒத்திகை நடைபெற்றது. சுமார் 500 பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட மாதிரி ஒத்திகை பயிற்சி தீயணைப்பு துறையினர் மூலம் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது.

 மேலும், இன்றைய தினம் பேரிடர் விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்ற பேரணிகள், மனித சங்கிலிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் மூலம் மாதிரி ஒத்திகை பயிற்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, நேற்று (13.10.2017) திருச்சிராப்பள்ளி மத்திய பேரூந்து நிலையம் அருகில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. ஒத்திகை பயிற்சியில் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி, சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆகிய மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 500-க்;கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை ஆகியோர் பதாகைகளுடன் கலந்து கொண்டனர். ஒத்திகை பயிற்சியை மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி, தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் பார்வையிட்டார். முன்னதாக திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் சர்வதேச பேரிடர் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரிடர் இன்னல் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணியானது மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கி வெஸ்ட்ரீ மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சியில் சார் கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் அ.~Pர், வட்டாட்சியர்கள் ஜவகர், மணிகண்டன், பாத்திமாசகாயராஜ், வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கிரேஸி மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து