முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் ஒலி மாசற்ற விபத்தில்லா தீபாவளி கொண்டாடுங்கள் கலெக்டர் இல.நிர்மல் ராஜ், வேண்டுகோள்

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      திருவாரூர்

தீபாவளி பண்டிகை ஒரு ஒளித் திருநாளாகும். தீபாவளி பண்டிகை விழாக் காலங்;களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிகமாக செவிட்டு தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டுத் தன்மையையும், ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.  

வேண்டுகோள்

எனவே, ஒளித்திருநாளான தீபாவளி பண்டிகையில் நமது கவனக் குறைவினாலும், அலட்சியத்தாலும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க அதிக சத்தமுள்ள பட்டாசுகளை தவிர்த்து விபத்தில்லா தீபாவளி பண்டிகையை அனைவருடைய ஒத்துழைப்போடும் கொண்டாட பின்வரும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. தயாரிப்பாளர்கள் கடைப்பிடிக்கப்படவேண்டியவை:

1. தயாரிக்கப்படும் பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள் மற்றும் ஒலிஅளவின் விவரத்தினை பட்டாசு பேக்கிங் பெட்டியில் குறிப்பிட வேண்டும்.

2. பட்டாசு வெடிக்கும் பொழுது ஏற்படும் ஒலி அளவானது நான்கு மீட்டர் தூரத்தில் 125 டெசிபல் அல்லது 145 டெசிபல் க்கு அதிகமாக ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

3. சரவெடிகளை பொருத்தமட்டில், அவை வெடிக்கும் பொழுது ஏற்படும் ஒலி அளவானது மேலே குறிப்பிட்ட அளவிற்கு குறைத்து கணக்கிடப்பட்டு அந்த அளவிற்குள் இருக்க வேண்டும் சில்லறைவிற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் கடைப்பிடிக்கவேண்டியவை:

1. 125 டெசிபல் அளவிற்குமேல் ஒலிஎழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி தயாரிக்கப்படாத பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:

1. இரவு 10.00 மணிமுதல் காலை 6.00 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்கக்கூடாது. 2. 125 டெசிபல் அளவிற்கு கீழ் ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும். அதனால் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் பாதுகாப்பாகவும் ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்குகந்த தீபாவளியினைக் கொண்டாடுமாறும், ஒலிமற்றும் காற்றுமாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளைத் தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை அனைவரும் கொண்டாடுமாறும் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ், தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து