முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலையில்லா மடிக்கணிணி மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்

திங்கட்கிழமை, 23 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -நிலக்கோட்டையில் 2.76 கோடி மதிப்புள்ள விலையில்லா மடிக்கணிணி 2227 மாணவ மாணவிகளுக்கு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில¢ நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, அம்மைநாயக்கனூர், காமுபிள்ளைசத்திரம், பள்ளப்பட்டி, விருவீடு, விளாம்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 2227 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வேலு முன்னிலை வகித்தார். நிலக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் யூனியன் பெருந்தலைவருமான யாகப்பன் வரவேற்றார். விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு நிலக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 176, விருவீடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 199, வத்தலக்குண்டு 128, பள்ளபட்டி 128, அம்மைநாயக்கனூர் 109, மட்டப்பாறை 54, கோம்பைப்பட்டி 51, சேவுகம்பட்டி 24 அணைப்பட்டி 74, விளாபட்டி 63, காமுபிள்ளைசத்திரம் 51, எச்.என்.யூ.பி.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 258, மாகலெட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 129, திரவியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 172, பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 195, என்.எஸ்.விவி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 416 ஆக 2227 மடிக்கணினி சுமார் 2.76 கோடி மதிப்புள்ள மடிக்கணினிகளை வழங்கி, மாணவ, மாணவிகள் மென்மேலும் மாண்புமிகு அம்மா போல் புகழ்பெற வேண்டும் என்று வாழ்த்தினார். விழாவில் நிலக்கோட்டை அதிமுக ஒன்றிய கழக செயலாளர் யாகப்பன், அம்மைநாயக்கனூர் பேரூர் கழக செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூர் கழக செயலாளர் சேகர், ஒன்றிய துணை செயலாளர் நல்லதம்பி, முன்னாள் ஒன்றியகுழு துணை தலைவர் சீனிவாசன், நிலக்கோட்டை தாசில்தார் நிர்மலாகிரேஸ், ஊராட்சி கழக செயலாளர் சேசுராஜ் கலந்து கொண்டனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை  அமுதா, வத்தலக்குண்டு மகாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பாண்டிஜோதி ஆகியோர் நன்றி கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து