முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசும்பொன் தேவர்குருபூஜைவிழாவிற்கு முதல்வர் வருகை அமைச்சர் எம்.மணிகண்டன் தகவல்

திங்கட்கிழமை, 23 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

கடலாடி-பசும்பொன் தேவர்குருபூஜைவிழாவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருவதா தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்  எம்.மணிகண்டன் தெரிவித்தார்.
   இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவைச்சேர்ந்த பசும்பொன்னில் சுதந்திரபோராட்ட தியாகியும் ஆண்மீக தலைவருமான முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ந்தேதி குருபூஜை விழாவும் ஜெயந்தி விழாவும்  நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 110வது ஜெயந்தி விழாவும் 55வது குருபூஜை விழாவும் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்  எம்.மணிகண்டன் பசும்பொன் தேவர் நினைவாலயத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
  அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது-
 தேவர் குருபூஜைவிழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு கூறினார்.
 உடன் மாவட்ட கலெக்டர் நடராஜன்- மாவட்ட எஸ்பி- ஓம்பிரகாஷ்மீனா- மாவட்ட செயலாளர் முனியசாமி- சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன்- வருவாய் கோட்டாட்சியர் முத்துமாரி- டிஎஸ்பி.ரவி-முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்-

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து