முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான திறனாய்வு போட்டி: கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி துவக்கிவைத்தார்

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் மாவட்ட அளவிலான திறனாய்வு போட்டி நேற்று நடைபெற்றது.

திறனாய்வு போட்டி

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எச்.சுகுமார் வரவேற்க, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ஜி.சிதம்பரம், பயிற்சி அலுவலர்கள் பி.செல்வராஜ், பி.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நிகழ்ச்சிக்கு தலைமையேற்று திறனாய்வு போட்டியினை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து மாணவர்கள் அமைத்திருந்த திறன் கருவி புதிய கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார். இந்த திறனாய்வு போட்டியில் மாவட்டம் முழுவதுமிருந்து அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பொறியியல் பட்டம், பாலிடெக்னிக், ஐடிஐ, கல்லூரி மாணவர்கள், தொழிற் பழகுநர்கள் மற்றும் குறுகிய கால பயிற்சி பெற்றோர், தொழில்நிறுவனங்களில் பணிபுரிவோர்கள், அமைப்பு சாரா தொழில்புரிவோர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெறும் திறனாய்வு போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ. ஒரு லட்சமும், 2ம் பரிசு ரூ. 50 ஆயிரமும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. முடிவில் திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலையமேலாளர் கே.செல்வம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து