முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு கொசுப்புழுக்கள் உருவாவதற்கு காரணமான 903 நபர்களிடமிருந்து ரூ.18,70,600 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்.

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை .- மதுரை மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்              கொ.வீர ராகவ ராவ்,  டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசும் பொழுது தெரிவித்ததாவது:
 தமிழ்நாடு முதலமைச்சர்   ஆணைக்கிணங்க, பருவமழை காலத்தில் காய்ச்சல், குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, மாநகராட்சி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.  4 நாட்களுக்கு மேல் தேங்கியிருக்கும் தண்ணீர் மூலம் கொசுப்புழுக்கள் உருவாகின்றன.  கொசுப்புழுக்களை வளராமல் தடுப்பதற்கும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கும் மதுரை மாவட்டத்தில் 6217 களப்பணியாளர்களைக் கொண்டு வீடு, வீடாக சென்று டெங்கு நோய் பரவும் காரணிகளை கண்டறிந்து, தடுக்கப்பட்டு வருகிறது.  கூடுதலாக 3280 பணியாளர்கள்  என மொத்தம் 9497 பணியாளர்கள் இப்பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 இப்பணியாளர்கள் தெரு மற்றும் வீடுகளில் துப்புரவு பணி மேற்கொண்டு வருகின்றனர்.  இப்பணியாளர்கள் அதிகாலை முதல் ஒவ்வொரு வீடுகளுக்கு சென்று டெங்கு கொசு எவ்வாறு உருவாகும், எவ்வாறு கொசு உருவாவதை தடுக்கலாம் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  கடந்த 24 மணிநேரத்தில் மதுரை மாவட்டத்தில் காய்ச்சல் என்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 240 நபர்களும், 46 நபர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பாலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கென தனியாக வார்டு மற்றும் போதுமான அளவு மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  கடந்த 2017 ஜனவரி முதல் தற்பொழுது வரை 1740 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். 
 கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  “தூய்மையே செல்பி” எனும் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டெங்கு நோயினை பரப்பும் கொசு உற்பத்தியினை அழித்தபின்னர் எடுத்துக்கொள்ளப்பட்ட செல்பி புகைப்படங்களை மாவட்ட ஆட்சித்தலைவரின் முகநூலில் பதிவேற்றம் செய்யப்படுபவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படவுள்ளது. 
 மாவட்ட நிர்வாகத்தின் தீவிர கண்காணிப்பு பணியின் போது டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியான இடங்கள் கண்டறியப்பட்டு இதுவரை 903 நபர்களிடமிருந்து ரூ.18,70,600  அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.  டெங்கு காய்ச்சல் என்பது சாதாரண காய்ச்சலே ஆகும்.  எனவே பொதுமக்கள் பீதியடையாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலை தவிர்க்கலாம்.  மேலும் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொண்டு தமிழகஅரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து