முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் 100 தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை : கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      கரூர்
Image Unavailable

 

கரூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து கரூரில் உள்ள 100 தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடனும், 7 ரோட்டரி சங்க நிர்வாகிகளுடனும் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு வழங்கிய ஆலோசனையில், தங்கள் மருத்துவமனை வளாகத்தினை துhய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு தொடர்ந்து சிறந்த சிகிச்சையினை வழங்க வேண்டும். மருத்துவ கழிவுகளை மிகுந்த கவனத்துடன் உரிய இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும். அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத மருத்துவமனைகளுக்கு அபராதமோ அல்லது தடையோ விதிக்கப்படும். மருத்துவமனை துப்புறவு பணியாளர்களுக்கு டெங்கு தடுப்பு முறைகள் குறித்து நகராட்சி அலுவலர்களால் பயிற்சியளிக்கப்படவுள்ளது என தெரிவித்தார். ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கு வழங்கிய ஆலோசனையில் கரூர் மாவட்டத்தில் 7 ரோட்டரி சங்கங்களில் 730 உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவ மாணவிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி விழிப்புணர்வு வழங்கிடவும் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டும் பணிகளை மேற்கொள்ளலாம். மேலும், மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்கள் அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றி உதவிடலாம் இதற்குரிய அட்டவணை தயார் செய்யப்பட்டு வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்பும், சங்கங்களும் இணைந்து டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு டெங்கு பாதிப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், நகராட்சி ஆணையர் அசோக்குமார், கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, நகராட்சி நகர் நல அலுவலர் மரு.தேவேந்திரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், வட்டாட்சியர் அருள், அனைத்து தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து