முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகராட்சியில் டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், முன்னேற்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      சென்னை
Image Unavailable

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர்.தா.கார்த்திகேயன், தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

 விழிப்புணர்வு

ஆய்வுக்கூட்டத்தின்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்ததாவது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள், விழிப்புணர்வு முகாம்கள், பேரணிகள், மாணவ, மாணவியர்களிடையே டெங்கு மற்றும் காய்ச்சல் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், ஒலிப்பெருக்கியின் வாயிலாக டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஏடிஸ் கொசுக்கள் உருவாக காரணமாக உள்ள தேவையற்ற பொருட்களான டயர், தேங்காய் ஓடுகள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், உரல், மூடப்படாத டிரம்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த வாகன உதிரிப் பாகங்கள், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் ஆகியவற்றில் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றிடவும், அதன் மூலம் உற்பத்தியாகும் கொசுப்புழுக்கள் குறித்தும், அதன் வாழ்க்கை சுழற்சி முறை குறித்தும் எடுத்துக் கூறி அதனைத் தடுத்திடும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், காய்ச்சல் கண்டறியப்பட்ட இடங்களில் அதிகப்படியான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், சுழற்சிமுறையில் தொடர்ச்சியாக குடிநீரை பரிசோதனை செய்திடவும், அம்மா உணவகங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் ஆகியவற்றில் மருத்துவ முகாம்கள் நடத்தி இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கிட வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், துணை ஆணையர்கள் ஆர்.லலிதா, எம்.கோவிந்த ராவ், எம்.விஜயலட்சுமி, மகேஸ்வரி ரவிக்குமார், கோபால சுந்தர ராஜ், உட்பட உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து