முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாய கடன் பெறும் விவசாயிகள் கிசான் கடன் அட்டையினை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்: கலெக்டர் .ரோஹிணி ரா.பாஜிபாகரே, தகவல்

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      சேலம்
Image Unavailable

 

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.10.2017) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் .ரோஹிணி ரா.பாஜிபாகரே , தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது :

விவசாயிகள் கூட்டம்

 

 

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தென்மேற்கு பருவ மழை முடிவடையும் நிலையில் சேலம் மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய இயல்பான மழையளவு 440.6 மிமீ ஆகும். தற்போது வரை 446.5 மிமீ மழையானது நமக்கு கிடைத்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இயல்பான ஆண்டு மழையளவு 997.9 மிமீ ஆகும். நடப்பாண்டு 23.10.2017 முடிய 835.4 மிமீ மழை பெறப்பட்டுள்ளது, இயல்பாக அக்டோபர் மாதம் முடிய பெய்ய வேண்டிய மழையான 818.3 மிமீ அளவை விட 17.1 மிமீ கூடுதலாக நடப்பாண்டில் மழை பெய்துள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் செப்டம்பர்-2017 மாதம் முடிய 1,40,874 எக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நெல் தானியம் 165.2 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 27 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 95.6 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்து 49.36 மெட்ரிக் டன்னும், பருத்தி 0.85 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இரசாயன உரங்களான யூரிய 11,230 மெட்ரிக் டன்னும், டி.எ.பி 5,725 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 6,325 மெட்ரிக் டன்னும் மற்றும் கலப்பு உரங்கள் 13,625 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதை நெல்லின் முனைப்பு திறனை வேளாண்மைத்துறை அலுவலர்கள் தனிகவனம் செலுத்தி ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் பழங்கள் 9,000 ஹெக்டரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 8,060 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காய்கறிகள் 30,000 ஹெக்டரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 12,324 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாசனை திரவியங்கள் 9,000 ஹெக்டரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 4,694 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ பயிர்கள் 500 ஹெக்டரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 176 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மலர்கள் 3,000 ஹெக்டரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 2,106 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று தக்காளி அதிகம் பயிரிடப்படும் இடங்களில் தக்காளியை ஜமாம் மற்றும் ச்சாஸ் ஆக தயாரிக்கும் தொழில்நுட்பம் அடங்கிய நடமாடும் வாகனம் விவசாயிகள் பார்வையிடும் வகையில் அவர்களின் பகுதிக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளது. விவசாயிகள் விருப்பம் தெரிவித்தால் ரூ.40 லட்சம் மதிப்பிலான மேற்கண்ட தக்காளி ஜமாம் மற்றும் ச்சாஸ் ஆக தயாரிக்கும் இயந்திரம் உடனடியாக வாங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடன் அட்டை

மேலும், விவசாயி கடன் பெறும் விவசாயிகள் கிசான் கடன் அட்டையினை தாங்கள் கடன் பெறும் வங்கிகளில் பெற்றுக்கொள்வதன் மூலம் கடன் தொகையினை தேவைப்படும் போது, தேவையான பணத்தினை கிசான் கடன் அட்டையினை பயன்படுத்தி எடுத்துக்கொள்வதால் எடுத்துக்கொள்ளப்பட்ட தொகைக்கு மட்டுமே வட்டி கணக்கில் சேர்க்கப்படுவது விவசாயிகளுக்கு பயனுள்ள ஒன்றாகும். சென்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் இது போன்ற பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினம் விவசாயிகள் தெரிவிக்கும் கருத்துகளை பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் .ரோஹிணி ரா.பாஜிபாகரே , தெரிவித்தார்.

 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், வேளாண்மை இணை இயக்குநர் சங்கர், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் .மலர்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மணிக்குமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் என்.பிரபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் உதயகுமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து