முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆர்வலர் குழுக்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுப்பண்ணையம்திட்டத்தின்கீழ் விவசாயிகள் ஆர்வலர் குழுக்களுக்கான ஆலோசணை கூட்டம் நடைபெற்றது.
  ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், மாயவரம் கிராமத்தில் கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆர்வலர் குழுக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூட்டுப்பண்ணையம் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் சிறு குழுக்களாக ஒருங்கிணைந்து அரசு மானிய உதவியுடன் எளிதில் வங்கி கடன் பெற்று ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணைய பணிகள் மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுப் பண்ணையம் திட்டத்தின் கீழ் சுமார் 495 விவசாயிகள் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
  கூட்டுப்பண்ணையம் மூலம் நெல், பயறு வகைகள், காய்கறிப் பயிர்கள், கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு போன்ற விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை வணிக நோக்குடன் மேற்கொண்டு அதிக லாபம் பெறலாம். மேலும் கூட்டுப் பண்ணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, இயற்கை விவசாயம் மற்றும் நுண்ணீர் பாசனம் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்தி இருமடங்கு லாபம் பெறமுடியும்.  இத்தகைய சிறப்பான திட்டத்தினை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். 
 இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பெ.இராஜா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ்பாபு, நபார்டு வங்கி மேலாளர் மதியழகன், வேளாண்மை அலுவலர்கள் ஆர்.இராஜலெட்சுமி, ஸ்ரீதர், அம்பேத்குமார் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து