முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்,டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான்   நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், டெங்கு கொசு புழுக்கள் உள்ளதா என்பதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 

ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர்  ஒவ்வொரு வாரம், வியாழக்கிழமை அன்று டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்கள்.  இந்நாளில், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பள்ளிக்கூடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் ஆகிய இடங்களில், டெங்கு கொசு ஒழிப்புப்பணிகளை தீவிரப்படுத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.அதனடிப்படையில்,  கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதியான, அண்ணா பேரூந்து நிலையத்தில் பொது கழிப்பறையில் உள்ள தண்ணீர் தொட்டி, பந்தல்விளை வீடுகளில் உள்ள பொருட்கள், பேரூந்துநிலையத்தில் உள்ள உணவகம், கடைகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் உள்ளதா என்பதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.  மேலும், பேரூந்து நிலைய வளாகம் மற்றும் அதன் சுற்றுபுறத்தில், டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி உள்ளதா என்பதை பார்வையிட்டு, உபயோகமற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திட, நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது, நாகர்கோவில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து