முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பெருமிதம்

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பெருமிதத்துடன் கூறினார்.ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளி தாளாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் முத்துசிவன், ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பாவெங்கடாச்சாரியார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.

விலையில்லா லேப்டாப்

விழாவில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு 62மாணவர்களுக்கு அரசின் விலையில்லா லேப்டாப்பை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு முதன்முதலில் வழிகாட்டியதுடன், மிகப்பெரும் அடித்தளம் அமைத்து தந்தவர் பெருந்தலைவர் காமராஜர் தான். காமராஜருக்கு பின்னால் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி சிறப்பாக இருப்பதற்கான சீர்மிகு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான். அவர் தான் மாணவர்களுக்கு கல்வி கட்டணம், எழுதுபொருட்கள், புத்தகம், நோட்டு, மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அனைத்துப்பொருட்களையும் இலவசமாக வழங்கினார். மறைந்த அம்மாவின் வழியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். மாணவர்கள் அரசின் சலுகைகளைப் பெற்று நன்கு படித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதுடன், தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார்.இதில், முன்னாள் யூனியன் சேர்மன் ஆறுமுகநயினார், பெற்றோர்&ஆசிரியர் கழக துணைத்தலைவர் இருளப்பன், அதிமுக நிர்வாகிகள் செம்பூர்ராஜ், அழகேசன், செல்லதுரை மற்றும் ஆசிரியர்கள் முத்தையா, குப்புசாமி, ஜெயவேல்முருகன், பாலு, மாணிக்கம், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து