முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் வேகமாக நடைபெற்று வருகிறது: தமிழக அரசுக்கு வைகோ பாராட்டு

வெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் வேகமாக நடைபெற்று வருவதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நேற்று நடைபெற்ற ம.தி.மு.க நகரச் செயலாளர் அனிதா.வி.பால்ராஜ் இல்லத் திருமணவிழாவில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார்.அப்போது வைகோ பேசியதாவது: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.அதே சமயம் டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இருப்பினும் டெங்குவால் பாதிக்ப்பட்ட மக்களுக்கு இரத்த தட்டணுக்களை அதிகப்படுத்துவதற்கான சிறப்பு முகாம்களை அரசு ஏற்படுத்த வேண்டும்.அகில இந்திய அளவில் மத்திய அரசு அனைத்து மதங்களையும் துச்சமாக கருதி பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது.மத்தியிலுள்ள ஆட்சி மக்களைப்பற்றி சிந்திக்காமல் பாசிசப் போக்குடன் செயல்பட்டு வருகிறது.மக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளும் ஒரே கட்சியும் தமிழகத்தின் நன்மைக்காக போராடும் ஒரே கட்சியும் ம.தி.மு.க தான் என்று பேசினார்.முன்னதாக திருமங்கலம் நகர் தேவர் திடலில் உள்ள தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில் முன்னாள் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன்,ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கதிரேசன்,புதூர் பூமிநாதன்,புலவர் செவந்தியப்பன்,செல்வராகவன்,கட்சி நிர்வாகிகள் அழகுசுந்தரம்,கணேசன்,திருப்பதி,பாஸ்கரசேதுபதி,சக்திவேல்,செல்வபாண்டி,உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து