முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறவுள்ள கோரம்பள்ளத்தில் கால்கோள் விழா: 5 அமைச்சர்கள் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தனர்

வெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017      தூத்துக்குடி

 

தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - நடைபெறவுள்ள கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாக மைதானத்தில், கலெக்டர் என்.வெங்கடேஷ், தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 அமைச்சர்கள்கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தனர்.

கால்கோள் விழா

 

மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா தாம் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் போதே.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூறினார்கள். அதனடிப்படையில் எம்.ஜி.ஆர். நினைவைப்போற்றும் வகையில், அவர் ஆற்றிய பணிகள், அவரைப்பற்றிய வரலாற்றை இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூன் 30 ம் தேதி மதுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கோலாகலமாக துவங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்ந்து திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், அரியலூர், காஞ்சிபுரம், திருவள்ளுர், ஈரோடு, வேலூர், நாமக்கல், நாகப்பட்டிணம், கிருஷ்ணகிரி, சேலம், கரூர், தர்மபுரி, புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய 20 மாவட்டங்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு, எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்தை திறந்து வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், அரசின் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள். இவ்விழா நடைபெறவுள்ள கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில், நேற்று கலெக்டர் என்.வெங்கடேஷ், தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே ராஜூ, கடம்பூர்.செ.ராஜூ ஆர்.பி.உதயகுமார், வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் கால்கோள் நாட்டினார்கள்.

இவ்விழாவில் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, எம்.பி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன்,, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டின், முன்னாள் மத்திய இணை அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மூ.வீரப்பன், மாநகராட்சி ஆணையர் டாக்டர்.அல்பிஜாண்வர்க்கீஸ்,இ.ஆ.ப., சார் ஆட்சியர் பிரசாந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரவணன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து