முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் நடைபெற்ற தனியார் துறைவேலைவாய்ப்பு முகாமில் 768 பேருக்கு பணிநியமன ஆணை

சனிக்கிழமை, 28 அக்டோபர் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 768 பேருக்கு பணிநியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர். சுமார் 2 ஆயிரம் பங்கேற்ற இம்முகாமில் தேர்வான 768 இளைஞர்களுக்கு பணிநியமண ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசியதாவது_
இந்த வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமுடன் வந்துள்ள இளைஞர்களை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாம்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது போன்ற ஒவ்வொரு முகாம்களை பயன்படுத்திக் கொண்டு வரும்போது தான் நமக்கான வேலை நம்மைத் தேடி வரும். இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்று வீட்டிலேயே முடங்கினால் சந்தர்ப்பம் வரும்போது நாம் அதை இழக்க நேரிடும். வாய்ப்புகளை நீங்களே ஏற்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். தற்பொழுது டெங்கு நோயினை கட்டுப்படுத்த நமது தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருந்து நமது வீட்டையும், நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து டெங்கு போன்ற எவ்வித நோய்களும் வராமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நமது நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை ஒவ்வொரு இளைஞனும் எண்ணி செயலாற்ற வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்படும் வேலையை முழு ஈடுபாட்டுடனும், செம்மையாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டும். இம்முகாமில் மொத்தம் 2073 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில 768 பேர் பல்வேறு தனியார் துறைகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், கொடுக்கப்படும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இம்முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியன், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் குணசேகரன், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், தனியார் துறைகளின் நிர்வாகிகள் உட்பட ஏராளமான இளைஞர்கள் கலந்து கெண்டனர்.

 ஊட்டியில் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமையொட்டி பிங்கர்போஸ்ட் முதல் கல்லூரி வரையிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அத்துடன் முகாமிற்கு வருபவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முகாமில் கோவை, திருப்பூர், நீலகிரி  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்று அவர்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து