முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலம் அருவிகளில் வெள்ளம் குறைந்தது : சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

குற்றாலம் அருவிகளில் வெள்ளம் குறைந்தது சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று இரவு திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. காலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்று லாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.குற்றாலம் மலைப்பகுதியில் கன மழை பெய்தது. இதனால் இரவு திடீரென குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆர்ச்சை தாண்டி வெள்ளம் சீறி பாய்ந்தது. தண்ணீரில் கற்கள், மரக்கிளைகள் அடித்து வரப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.அருவிக்குச் செல்லும் வழியில் கயிறுகட்டி காவல் துறையினர் தடை ஏற்படுத்தினர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

குளிக்க அனுமதி

சிற்றருவி, புலியருவியிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஐந்தருவியில் இரவு 9 மணிக்கு மேல்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்அங்கும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிற்றாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை துவங்கிய பின்னர் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்கத் தடை விதிக்கப்பட்டது இதுதான் முதல்முறை.இன்று காலையில் மெயின்அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனையடுத்து அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து