முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுமை மிக்க மாவட்டமாக கடலூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் மாவட்டம் காரணப்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அருகில் பசுமை இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகளை  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நட்டார். இந்நிகழ்ச்சியில்  தொழில்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது.

வேண்டுகோள்

இன்றைய நிகழ்வு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். கடலூர் மாவட்டம் பசுமை மிக்க மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் காரணப்பட்டு ஊராட்சியில் மரக்கன்றுகள் நடுவதற்கான துவக்க விழா இன்றைய தினம் துவக்கிவைக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைத்தால்தான் கடலூர் மாவட்டத்தில் மரக்கன்றுகளை அதிகம் நட்டு பசுமை மிக்க மாவட்டமாக உருவாக்க முடியும். எனவே, கடலூர் மாவட்டத்திலுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பசுமை இயக்கத்தினை முழுமையாக வெற்றியடையச் செய்து மாநில அளவில் கடலூர் மாவட்டம் பசுமை மிக்க மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொது செயலாளர் எம்.நிஜாமுதீன், நுகர்வோர் கூட்டமைப்பு ஆலோசகர் பாபு மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து