முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      கடலூர்
Image Unavailable

 கடலூர் பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்   டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ்   கொசுப்புழு இருக்குமிடத்தை  கண்டறியும் வகையில் கலெக்டர்  பிரசாந்த் மு.வடநேரே,    நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள குடிநீர் தொட்டியினை கலெக்டர்  பார்வையிட்டபோது தொட்டியில் உள்ள நீரினில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில்; ஆய்வு மேற்கொண்டார். அப்போது இத்தொட்டியினை சரிவர தினந்தோறும் சுத்தம் செய்து குளோரினேஷன் செய்யவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில் உபயோகமற்ற பொருட்களான டயர், டீ கப் மற்றும் வாட்டர் பாட்டில், தெர்மாகோல் ஆகியவற்றினை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடு வீடாக சென்று கள ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை செய்து சிகிச்சை பெறவேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன். மேலும், கடந்த பல்வேறு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த வகையில் பல்வேறு வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தினை பொறுத்தவரை இக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பினும்  மேலும் இக்கொசுப்புழுக்களால் டெங்கு காய்ச்ச்ல் ஏற்படா வண்ணம் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின்போது கடலூர் பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்   ப.குமரன், நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான்,மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து