முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு பணிகள் அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், கடுகூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதியதாக வழங்கிய இரத்த பரிசோதனை கருவியினை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

 அரசு கொறடா ஆய்வு

கடுகூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரத்த பரிசோதனை கருவி (செல் கவுண்டர்) தமிழக அரசால் வழங்கப்பட்டதை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து அரசு தலைமைக்கொறடா கூறியதாவது :- அரியலூர் அரசு பொது மருந்துமனையில் மட்டுமே இரத்த பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு அரியலூர் மாவட்டத்தில் 7 இரத்த பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களான கடுகூர், செந்துறை, ஆண்டிடம், தா.பழூர், மீன்சுருட்டி, திருமானூர் மற்றும் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய 7 மருத்துமனைகளில் இரத்த பரிசோதனை கருவி வழங்கப்பட்டுள்ளது. இக்கருவின் மூலம் இரத்தத்தில் உள்ள இரத்த அனுக்களை துல்லியமாக கணக்கிட முடியும். பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி ஏற்படும் பட்சத்தில் உடனடியாக இரத்த பரிசோதனை மேற்கொண்டு பயன்பெறும் நோக்கிலும், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் காய்ச்சல் சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருவதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார். பின்னர், கல்லங்குறிச்சி கிராமத்தில் தூய்மைப்பணி மேற்கொள்ப்பட்டு வருவதை அரசு தலைமைக்கொறடா பார்வையிட்டு, வீடு, வீடாச் சென்று வீட்டில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள், குடங்கள், பாத்திரங்களில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரை மூடிவைத்துக்கொள்ளுமாறு வீட்டு உரிமையாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாகவும், தண்ணீர் தேங்கதவாறு பார்த்து கொள்ளவும் பொதுமக்களிடம் அரசு தலைமைக் கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வின்போது, அரியலூர் கோட்டாட்சியர் மோகனராஜன், துணை இயக்குநர் சுகாதாரபணிகள் ஹேமசந்த்காந்தி, வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மருத்துவர்கள் உமாகேஷ்வரி, ஆனந்தன், ஆனந்தகுமார், மருதுபாண்டியன் மற்றும் சுகாதார பணியாளர்கள், வளர்ச்சித்துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து