முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணி: அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      நாமக்கல்
Image Unavailable

 

நகராட்சி பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள், ரோட்டரி கிளப், லையன்ஸ் கிளப், ரெட்கிராஸ், தன்னார்வ அமைப்புகள் மூலம் 1000-க்கும் மேற்ப்பட்டவர்களை பல்வேறு குழுக்களாக ஒருங்கிணைத்து திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணி நேற்று (29.10.2017) துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர்கள் ஆய்வு

இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் கலந்துக்கொண்டு திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணியினை துவக்கி வைத்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, கடந்த ஒருமாத காலத்திற்கு மேலாக டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பணிகளின் ஒரு பகுதியாக நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும் தற்போது நாமக்கல் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பணியாளர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோரைக் கொண்டு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மேலும் இதுகுறித்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி பகுதிகள் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இராசிபுரம், நாமக்கல் ஆகிய நகராட்சிகளை தொடர்ந்து இன்றைய தினம் திருச்செங்கோடு நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1200-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் ஈடுபடுத்தப்பட்டு, திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் இதுகுறித்த விழிப்புணர்வை முழுமையாக பெறவேண்டும். மேலும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டினையும், சுற்றுபுறங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இம்மாபெரும் தூய்மைப்பணியில் 25 நபர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு திருச்செங்கோடு நகராட்சி முழுவதுமுள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், கட்டிடங்கள், சாக்கடைகள், கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ளப்படுகின்றது. நீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை சேகரிப்பதற்கு லாரிகளும், சாக்கடைகள் மற்றும் நீர் போகும் பகுதிகளில் ஏதேனும் அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை சரி செய்வதற்கு பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும், தூய்மைப்பணியில் ஈடுபடும் நகராட்சி பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டு நகராட்சி முழுவதும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராமசாமி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர் கோ.ரமேஷ்குமார், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன், திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர்(பொ) கே.சுகுமார், திருச்செங்கோடு வருவாய் வட்டாட்சியர் பூவராகவன், திருச்செங்கோடு நகராட்சி, மருத்துவத்துறை, பொதுசுகாதாரத்துறை கொசு ஒழிப்பு பணியாளர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள், தன்னார்வ அமைப்புகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து