முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெற்றோர்களை விட மாணவ, மாணவியர்கள் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் அதிக ஈடுபாட்டோடு இருக்கின்றனர் : கலெக்டர் ரோஹிணி ரா. பாஜிபாகரே பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      சேலம்

சேலம் மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆய்வு செய்யும் பொருட்டு, கலெக்டர் ரோஹிணி ரா. பாஜிபாகரே பல்வேறு பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் நேற்று அம்மாபேட்டை மண்டலம் கோட்டம் எண் 37 ல் உள்ள காமராஜர் காலனியில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கலெக்டர் பாராட்டு
வீடுதோறும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் பொதுமக்களை வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்கள் , குடி தண்ணீர் சேகரிக்கும் மேல் நிலைத் நீர்த்தேக்க தொட்டிகள் , கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் , பிளாஸ்டிக் டிரம்கள், பாத்திரங்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்துவதற்கு ஏதுவாக, மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் குடிநீர் விநியோகத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி , குடியிருப்பு பகுதிகளை தூய்மைப்பகுதிகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

 

மேலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ,மாணவியர்களிடம் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த விவரங்களை, மாவட்ட கலெக்டர் கேட்ட பொழுது பெற்றோர்களை விட பள்ளி மாணவ, மாணவியர்கள் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த விவரங்களை தெளிவாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்கள். பெற்றோர்களை விட மாணவ, மாணவியர்களிடம் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த விவரங்கள், தெளிவாக புரிந்து வைத்துள்ள மாணவ , மாணவியர்களை கலெக்டர் பாராட்டினார். மாணவ, மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுக்கு தினசரி வீட்டைத் தூய்மைப்படுத்துவது, பாத்திரங்களை சுத்தப்படுத்துவது, குளிர்சாதனப் பெட்டிகளை முறையாக பராமரிப்பது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் வீடுகளில் உள்ள குளிர் சாதனப் பெட்டிகளை முறையாக பராமரிப்பதற்கு தேவையான விவரங்களை உள்ளடக்கிய , ஒட்டு வில்லைகளை ஒட்டி கலெக்டர் விளக்கினார். அப்பகுதியில் உள்ள வீடுகளில் விசைத்தறி மூலம் நெசவு செய்யும் பகுதிகளையம் கலெக்டர் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் கோட்டம் எண் 7 ல் உள்ள அய்யன்திருமாளிகை பகுதி, நீதிபதிகள் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடங்களில், தீவிர துப்புரவு பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் வாகனத் தெளிப்பான்கள் மற்றும் கைத்தெளிப்பான்கள் மூலம் உரிய இடைவெளியில் மருந்து தெளிப்பு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இவ்வாய்வின் போது உதவி ஆணையாளர்கள் ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், நா. சத்திய நாராயணன், மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், தாய் சேய் நல அலுவலர் திருமதி என். சுமதி , உதவி செயற்பொறியாளர் எம்.ஆர். சிபி சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து