முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      நீலகிரி
Image Unavailable


நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா செய்தியாளர் பயணத்தின்போது ஆய்வு செய்தார்.

அப்போது கூடலூர் ஊராட்சி ஒன்றியம், சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட இண்டிகோ நகர் பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையத்தினையும், மாசாவன்சேரம்பாடி பகுதியில் ரூ.5.20 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பம்ப் அறை மற்றும் குழாய் அமைக்கும் பணியினையும் மாவட்ட கலெக்டர்  செய்தியாளர் பயணத்தின்போது, ஆய்வு செய்தார்.

மேலும் நெலாக்கோட்டை ஊராட்சி ராக்வுட் பகுதியில்  மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.22 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் நடைபாதை பணியினையும், தாய் திட்டத்தின் கீழ் ரூ.25.03 இலட்சம் மதிப்பில் குன்னலாடி முதல் புளியாடி வரை 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்று வரும் சாலை பணியினையும், அம்பலமூலா பகுதியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அம்மா பூங்கா மற்றும்  உடற்பயிற்சி மையத்தினையும், பழையூர் பகுதியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய பணியினையும், கொள்ளச்சல் முதல் பனிக்கல் வரை ரூ.17.20 இலட்சம் மதிப்பில் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்று வரும் சாலை பணியினையும், பிரதான் மந்திரி கிராம சதக்யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.273.20 இலட்சம் மதிப்பில் முக்கட்டி முதல் பக்கானா வரை 6.10 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்று வரும் சாலை பணியினையும், அய்யன்கொல்லி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் சத்துணவு கூடம் மற்றும் பொருட்களின் தரத்தினையும், இருப்பினையும் ஆய்வு செய்தார்.

நெலாக்கோட்டை மற்றும் சேரங்கோடு பகுதியில் வாழும் பழங்குடியின மக்களிடம் அவர்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார். சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

இச்செய்தியாளர் பயணத்தின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து