முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நஞ்சநாடு கிராமத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 72 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 31 அக்டோபர் 2017      நீலகிரி
Image Unavailable

நஞ்சநாடு கிராமத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 72 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை ராஜ்யசபா உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன் வழங்கினார்.

எம்.பிதத்தெடுத்த கிராமம்

நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி வழங்கும் விழா ராஜ்யசபா உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணனால் தத்தெடுக்கப்பட்டுள்ள, ஊட்டியருகேயுள்ள நஞ்நாடு கிராமத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஊர் தலைவர் நஞ்சா கவுடர் தலைமை தாங்கினார். தாத்தன் வரவேற்று பேசினார். விழாவில் ராஜ்யசபா உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நஞ்சநாடு, ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ கரியபெட்டையா ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 72 பயனாளிகளுக்கு ரூ.25.10 லட்சம் மதிப்பிலான பயிர்கடன் மற்றும் சுய உதவிக்குழுக் கடன்கள் மற்றும் 5 நபர்களுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு ஆகியவைகளை வழங்கி பேசியதாவது_

உயர்கோபுர மின் விளக்கு

நஞ்சநாடு கிராமம் மிகப்பெரிய கிராமம். இந்த ஆண்டு இக்கிராமத்தை நான் தத்தெடுத்துள்ளேன். உங்கள் கிராமத்திற்கு என்னென்ன தேவை என்று கூறுங்கள். அந்த பணிகளை எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிறைவேற்றி தருவேன். உங்கள் ஊருக்கு உயர்கோபுர மின் விளக்கு அமைத்துத்தரப்படும். அம்மா ஆட்சியில் தான் விலையில்லா அரிசி, மாணவர்களுக்கு மடிக்கணினி போன்ற திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளாகிய நீங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாங்கிய கடனை ஓராண்டு காலத்திற்குள் திருப்பிச் செலுத்தி புதிய கடனை பெற்றுக் கொள்ளலாம். வரும் டிசம்பர் மாதம் 7_ந் தேதி ஊட்டியில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அப்போது ரூ.50 கோடி அளவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. உங்களுக்கு தேவையானவற்றை மனுவாக அளித்தால் அந்த விழாவில் உதவிகள் வழங்கப்படும் என்றார்.

74 கூட்டுறவு சங்கங்கள்

விழாவில் மண்டல இணைப்பதிவாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்து பேசும்போது, நமது மாவட்டத்தில் 74 கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு அமைப்புகள் மிகப்பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு கூட்டுறவு சங்கங்களின் கடன்களைப் பெற்று வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வழிபாட்டு கருவியாக செயல்படுகிறது. கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை திருப்பி செலுத்தினால்தான் பங்குத்தொகை அதிகரித்து லாபப்பிரிவினை செய்யமுடியும் என்றார்.

ரூ.27 கோடி

மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பார்த்திபன் பேசும்போது, தமிழகத்தில் எல்லமாவட்டத்திலும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இங்குள்ள மக்கள் சமவெளிப்பகுதியை நாடிச்செல்வதால் இங்கு குறைந்துள்ளது. அதையும் தாண்டி நீலகிரியில் நீங்கள் இருப்பது பெருமைக்குறிய விஷயம். இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை ரூ.27 கோடி வரை கடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் வாங்கிய கடனை ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்தி வட்டி தள்ளுபடி பெற வேண்டும் என்றார். 
விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெள்ளி, என்.சி.எம்.எஸ் தலைவர் கண்ணபிரான், நஞ்சநாடு கூட்டுறவு கடன் சங்க தலைவர் சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் சங்க செயலர் ரவி நன்றி கூறினார். விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி கடன் மேலாளர் சாரி, கூட்டுறவு சார் பதிவாளர் அய்யப்பன், சங்கத்தின் சூப்பர்வைசர் ரவி, ஸ்ரீ ரங்கநாதர் கடன் சங்க செயலர் ஸ்ரீராம், அ.தி.மு.கநிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் வசந்தராஜன்,  தொரையட்டி சிவலிங்கம், கூக்கல் ராஜேந்திரன், வக்கீல் கீதா, நஞ்சநாடு செந்தில் மற்றும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த செயலாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து