முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி: கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி துவக்கிவைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலையில் நேற்று தொடங்கிய மாநில அளவிலான மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி துவக்கிவைத்தார். திருவண்ணாமலை ஸ்ரீ கோகுல கிருஷ்ணா திருமண மஹாலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் நடத்தும் மாநில அளவிலான மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி துவக்கவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு வந்த அனைவரையும் மகளிர் திட்ட இயக்குநர் ப.ஜெயசுதா வரவேற்றார்.

உதவி திட்ட அலுவலர் வி.முருகானந்தம், நிகழ்ச்சி நிரலை தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விழாவுக்கு தலைமையேற்று விற்பனை கண்காட்சி குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இந்த கண்காட்சி அரங்கில் திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, ஊட்டி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்கில் இடம்பெற்றிருந்தன. வருகிற 16ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் இந்த விற்பனை கண்காட்சியில் மண்ணினால் செய்யப்பட்ட கைவினை பொருட்கள், ஜூட் மற்றும் லெதர்-ன் ஆல் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பொம்மைகள் மற்றும் ஆயத்த ஆடைகள், கைத்தறி சேலைகள், போன்சி பொருட்கள், மரபொம்மைகள், எண்ணற்ற வீட்டு அலங்கார பொருட்கள், உணவு பொருட்கள் உள்ளிட்ட விற்பனை பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, உதவி திட்ட அலுவலர்கள் சி.டி. நாராயணசாமி, ஸ்ரீபாரதி, தாசில்தார் ஆர்.ரவி, வருவாய் ஆய்வாளர் கே.மணிகண்டன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் ஒய்.ஜான்சன் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து