முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசி பகுதியில் விடிய விடிய பெய்த மழை : குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

தென்காசி பகுதியில் விடிய விடிய கன மழை பெய்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குளிக்கத் தடை  

தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் மழை பெய்யத் துவங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. பின்னர் சிறிது இடைவெளி விட்டு விட்டு இரவு முழுவதும் மழை தொடர்ந்தது. வடகிழக்கு பருவ மழையின் தீவிரத்தால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் சாலைகளில் மெதுவாக ஊர்ந்து சென்றன. குற்றாலம், செங்கோட்டை பகுதிகளிலும் கன மழை தொடர்ந்தது.குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த கன மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி வெள்ளம் சீறி பாய்ந்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் 5 கிளைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இன்று காலையில் சிற்றருவி, புலியருவி, பழையகுற்றாலம் சென்று சுற்றுலாப் பயணிகள் குளித்தனர். அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் பருவமழையின் தீவிரத்தால் சிற்றாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.செங்கோட்டை குண்டாறு அணை, மேக்கரை அடவிநயினார்அணை ஆகியவற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே அடவிநயினார் அணையில் இருந்து கடந்த 1ம் தேதி விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்ப ட்டுள்ளது. இதனால் இதன் பாசன குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கன மழையால் நிலத்தடி நீர் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து