முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தான்குளம் பகுதியில் ரூ. 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீதிமன்ற கட்டிடம்: சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

சாத்தான்குளத்தில் 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாவட்ட துணை நீதிமன்ற கட்டிடத்தை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ பார்வையிட்டார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வெள்ளத்தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் எஸ்.பி. சண்முகநாதன்  எம்எல்ஏ ஆலோசனை நடத்தினார்.  நவ.22 ஆம்தேதி நடைபெற   உள்ள  எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நலத்திட்ட  உதவிகள் பெறும் பயனாளிகள் தேர்வு மற்றும் பருமழையால் வெள்ளச்சேதம் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக  சாத்தான்குளம்  ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில்

 அப்போது,  முதல்வரால் வழங்கப்படவுள்ள நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளைத் தேர்வு செய்து விழாவுக்கு அழைத்து வர வேண்டும் எனவும், மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு, நிவாரணப்பணிகளுக்கு பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் எம்எல்ஏ சண்முகநாதன் அறிவுறுத்தினார்.  இதையடுத்து, சாத்தான்குளத்தில் 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாவட்ட துணை நீதிமன்ற கட்டிடத்தை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட முன்னாள் கவுன்சிலர் திருப்பாற்கடல், சாத்தான்குளம்  ஒன்றிய  அதிமுக செயலர் அச்சம்பாடு செளந்திரபாண்டி, நகரச் செயலர் என்.எஸ். செல்லத்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து