முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் ஸ்டூவர்ட் கால்வாய், சுத்துகுளம் கால்வாய், ஈச்சங்காடு கால்வாய் ஆகிய பகுதிகளில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் ஸ்டூவர்ட் கால்வாய், சுத்துகுளம் - துறைமுகம் இரயில்வே சந்திப்பு அருகில் உள்ள கால்வாய், ஈச்சங்காடு கால்வாய் ஆகிய பகுதிகளில்  கலெக்டர்        பிரசாந்த் மு.வடநேரே, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் ஆய்வு

வடகிழக்கு பருவமழையின்போது, மழைநீர் தேங்காவண்ணம் வடிந்து செல்ல ஏதுவாகவும், தங்கு தடையின்றி செல்லவும்  நீர்வழிப்பாதைகளை பொதுப்பணித்துறை மூலம் தூர்வாரப்பட்டு அதன் கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது.  தற்சமயம் கடலூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு உள்ளதையடுத்து கடலூர் ஸ்டூவர்ட் கால்வாய்,  சுத்துகுளம் - துறைமுகம் இரயில்வே சந்திப்பு அருகில் உள்ள கால்வாய், ஈச்சங்காடு கால்வாய் ஆகிய வெள்ளநீர் வடிகால்களை கலெக்டர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, மழைநீர் தங்கு தடையின்றி செல்கிறதா எனவும், நீர்வழிப்பாதைகளில் கரைகளின் உறுதித்தன்மை குறித்தும் கலெக்டர் அவர்கள் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். கால்வாய்களில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் குப்பைகளை உடடினயாக அப்புறப்படுத்திடவேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளில் இருந்து வெள்ளநீர் வடிந்து சென்றிட உரிய வழிமுறைகளை கண்டறிந்து உடனே செயல்படுத்திட வேண்டுமென  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், கடலூர் நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், கடலூர் வட்டாட்சியர் பாலமுருகன், கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வி.சரத் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து