முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,   தலைமையில்   நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

குறைதீர் கூட்டம்

நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 258 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு தெளிவான பதிலை அளிக்கவேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

க்கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் கடலூர் குண்டுஉப்பலவாடியைச் சேர்ந்த ஜெ.சௌந்தரராஜன் என்பவர் திருக்கோவிலூர் கிளை சிறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்தபோது 17.04.2015 அன்று மாரடைப்பால் இறந்தமைக்கு அவரது மனைவி இரத்தினா அவர்களிடம் ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினையும், பண்ருட்டி வட்டம் அரிசிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் 16.06.2017 அன்று மின்சாரம் தாக்கி இறந்தமைக்காக அவரது மனைவி விஜயலட்சுமி அவர்களிடம் ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2016-17ம் ஆண்டில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தினை பெற்ற சி.சுந்தர்ஜிக்கு ரூ.30,500-ம், இரண்டாமிடம் பெற்ற ஆர்.சுமதிக்கு ரூ.9,000- மூன்றாமிடம் பெற்ற ஏ.அபிநயாவிற்கு ரூ.27,500-, 2016-17ம் ஆண்டில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற சண்முகசுந்தரத்திற்கு ரூ.49,000- இரண்டாமிடம் பெற்ற சிவகாமிக்கு ரூ.14,500-, மூன்றாமிடம் பெற்ற அபிராமிக்கு ரூ.41,500-க்கான காசோலையினையும், பாராட்டுச்சான்றிதழையும் கலெக்டர்  பிரசாந்த் மு.வடநேரே,  வழங்கினார்.

இக்குறைகேட்புக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)  கூஷ்ணாதேவி, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) சேதுராமன், ஆகியோர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து