முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் நீடித்த நிலைத்த வாழ்வாதார பயிற்சி நிறுவனம்: அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ்வர்மா ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள, ஆரோவில் நிறுவனத்துடன் இணைந்து தொழில்கள் தொடங்க அமைக்கப்பட்டுள்ள, நீடித்த நிலைத்த வாழ்வாதார பயிற்சி நிறுவனத்தை அரசு கூடுதல் தலைமைச் செயலர் (ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை) ஹன்ஸ்ராஜ்வர்மா , கலெக்டர் இல.சுப்பிரமணியன்   பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

21 விதமான பயிற்சி

வானூர் வட்டம் இரும்பை ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள, ஆரோவில் நீடித்த நிலைத்த வாழ்வாதார பயிற்சி நிறுவனத்தின் மூலம் 2015ஆம் ஆண்டிலிருந்து, மகளிர் குழு உறுப்பினர்கள், மொத்த தொழில் செய்யும் உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆகியோருக்கு, இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு தானியங்கள் உற்பத்தி, மூலிகை செடிகள் கொண்டு மருந்து தயாரிப்பு, திடக் கழிவுகளைக் கொண்டு உரம் தயாரித்தல், தூய்மை காவலர் பயிற்சி உள்ளிட்ட 21 விதமான பயிற்சிகளை 2,493 பயிற்சியாளர்களுக்கு இன்று வரை அளித்துள்ளது.  தமிழ்நாடு அரசு மகளிர் வாழ்வாதார இயக்க மூலம் நடத்தப்படும், இயற்கை பயிற்சிக்கான தொகையை 100 சதவீதம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலமாக வழங்கி வருகிறது.  இந்நிறுவனத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பயிற்சிகளை விரிவாக்க அரசு கூடுதல் தலைமைச் செயலர் (ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை) ஹன்ஸ்ராஜ்வர்மா , இன்றைய தினம் பயிற்சி நிறுவனத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின்போது கூடுதல் ஊரக வளர்ச்சி இயக்குநர் ஜா.சம்பத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வி.மகேந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தரராஜன், செயற்பொறியாளர்கள் ராஜா, சுந்தரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து