முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபநாசம், கும்பகோணம் வட்டங்களில் வடகிழக்கு பருவ மழையினால் வீடுகள் பாதிக்கப்பட்ட 35 நபர்களுக்கு ரூ.1,51,600 நிவாரண உதவி தொகையினை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      திருச்சி
Image Unavailable

பாபநாசம் மற்றும் கும்பகோணம் வட்டங்களில் வடகிழக்கு பருவ மழையினால் வீடுகள்  பாதிக்கப்பட்ட 35 நபர்களுக்கு ரூ.1,51,600 நிவாரண உதவி தொகையினை  வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு  மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை,   முன்னிலையில் இன்று (07.11.2017) வழங்கினார்.

பாபநாசம் வட்டத்தில் பருவ மழையினால் வீடுகள் சேதமடைந்த 4 நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரமும், கும்பகோணம் வட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் வீடுகள் சேதமடைந்த 35 நபர்களுக்கு  நிவாரணமாக 26 பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4100 வீதம் ரூ.1,06,600ம், முழுமையாக சேதமடைந்த 5 வீடுகளுக்கு ரூ.5000 வீதம் ரூ.25,000 நிவாரண உதவித்தொகையினை வழங்கி  வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு  தெரிவித்ததாவது,

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு  அம்மா அவர்களின் வழியில் நடக்கும் தமிழக அரசு பொது மக்கள் பாராட்டும் வகையில் அனைத்து நிவாரண நலத்திட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பருவ மழையை முன்னிட்டு  முதலமைச்சர் அவர்களின் உத்தரவு படி முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக எந்த ஒரு பகுதியிலும் பாதிப்புகள் அதிகம்  ஏற்படவில்லை.   தமிழக முதலமைச்சர் அவர்களின் சீரிய திட்டமான குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஆறுகள், குளங்கள் தூர்வாரப்பட்டு வாய்க்கால் செப்பனிடப்பட்டதால் வடகிழக்கு பருவ மழையால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.  தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிட  தமிழக முதலமைச்சர்  அறிவுறுத்தி ஆணையிட்டார்கள். அதன்படி இன்று பாபநாசம் மற்றும் கும்பகோணம் வட்டத்தில் பருவ மழையினால் வீடுகளை இழந்த நபர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.  அம்மாப்பேட்டை, திருவையாறு, பாபநாசம் ஆகிய பகுதிகளில் நானும் மாவட்ட கலெக்டர் அவர்களும் நேரடியாக சென்று பார்வையிட்டு பருவ  மழை குறித்து ஆய்வு செய்தோம். தண்ணீரில் பயிர்கள் மூழ்கியதாக கூறப்பட்டு வந்தது, தற்போது மழை தண்ணீர் வடிந்து வருகிறது. குடிமராமத்து பணிகள் நடைபெற்றதால், பொது மக்களுக்கு அதிக அளவில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு  வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு  தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியின் போது கும்பகோணம் சார் கலெக்டர் பிரதீப்குமார்,  முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் ராம்குமார், இராம.இராமநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்கொடி சீனிவாசன், அசோகன், அழகு.த.சின்னையன், மகாலிங்கம், முன்னாள் பேரூராட்சித் தலைவர் கருணாநிதி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் செல்வம், கர்ணன், அயூப்கான், அரசு வழக்கறிஞர் சோழபுரம் அறிவழகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து