முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை பாதிப்பு புகார்களுக்கு உடனடி நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      சென்னை

கும்மிடிப்பூண்டி வட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை உடனுக்கு   உடன் வருவாய் துறையினருக்கு தெரிவித்து பாதிப்பை சீர் செய்யும் வகையில் பொதுமக்களுக்கு 24 மணி   நேர சேவை வசதியை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலவத்தில் ஏற்படுத்தி உள்ளதாக          திங்களன்று மழை பாதிப்பு கண்காணிப்பு அலுவலரான தமிழக அரசு வேளாண் துறை இணை    செயலாளர் டாக்டர் எம்.கருணாகரன் தெரிவித்தார்.

 தமிழக அரசின் சார்பில் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு மழை பாதிப்பு கண்காணிப்பு அலுவலராக   தமிழக அரசின் வேளாண் துறை எணைச் செயலாளர் டாக்டர் எம்.கருணாகரன், கும்மிடிப்பூண்டி   வட்டத்தில் மழை பாதிப்புகளை பார்வையிட்டு, அரசு சார்பில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை   நடவடிக்கை, மறுசீர் நடவவடிக்கை குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.,கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அனைத்து துறை சார்ந்த  ஆலோசனை  கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால்,  தனி வட்டாட்சியர் தாமோதரன், வருவாய் ஆய்வாளர்கள் பாலாஜி, கண்ணன்,  நெடுஞ்சாலை  துறை   உதவிக் கோட்ட பொறியாளர்  டில்பாபு, பொதுப்பணித் துறை உதவி  பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு துறையினர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்ற கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் மழை பாதிப்பு மறுசீரமைப்பு   முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கினார். தொடர்ந்து   கும்மிடிப்பூண்டி அடுத்த அயநெல்லூர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.  தொடர்ந்து கும்புளி கிராமத்தில் மழை பாதிப்பால் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை   சந்தித்து பேசினார். மேலும் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள், சாலைகளில்   ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தார்.இந்நிலையில் கும்மிடிப்பூண்டி வட்ட பொதுமக்கள் வடகிழக்கு பருவ மழை பாதிப்பு குறித்த குறைகளை   மற்றும் புகார்களுக்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்க   கூடிய வகையில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 044 27921491 என்ற எண்ணில் தொடர்பு   கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் கும்மிடிப்பூண்டி குறுவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வருவாய் ஆய்வாளரை    8072885020 என்ற எண்ணிலும், பூவலம்பேடு குறுவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்   ஆய்வாளரை 9042748448 என்ற எண்ணிலும், மாதர்பாக்கம் குறுவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள்   வருவாய் ஆய்வாளரை 8072447492 என்ற எண்ணிலும், எளாவூர் குறுவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள்    வருவாய் ஆய்வாளரை 8438988810 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டு   உள்ளனர்.மேலும் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள மழை தொடர்பான குறைகள், புகார்களை கும்மிடிப்பூண்டி   வட்டாடாட்சியருக்கு 9445000491 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும், வடகிழக்கு   பருவ மழை தொடர்பாக அவரச மற்றும் முக்கிய புகார்களுக்கு தமிழக அரசால் மழை பாதிப்பு    குறித்து நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் வேளாண் துறை இணை   இயக்குனரை 9600067274 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து