முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘குரு உச்சத்துல இருக்காரு’ டிரைலர் ரிலீஸ்

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில், தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குரு உச்சத்துல இருக்காரு‘. இதில் குரு ஜீவா கதாநாயகனாகவும், ஆரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் பாண்டியராஜன், எம்.எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், இமான் அண்ணாச்சி, மனோ மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் சினேகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு இசையமைத்த தாஜ் நூர், இதில் வேலை பார்த்தது தனக்கு ஒரு புது அனுபவத்தை தந்ததாகவும், பாடல் காட்சிகள் படப்பிடிப்புகள் முடிந்த பின்னால் இசையமைத்தது சவாலாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அபிராமி ராமநாதன் பேசுகையில், படத்தின் டிரைலர் மிகவும் நன்றாக இருந்தது. அறிமுக இயக்குனரின் வேலையை போல இல்லாமல் அனுபவம் நிறைந்த ஒரு இயக்குனரின் பட டிரைலர் போல இருந்தது. இந்த படத்தை தன் மகனுக்காக தயாரித்த தன சண்முகமணியை பாராட்ட விரும்புகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து