முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் 25 அடி உயர்ந்தது

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் 25 அடி உயர்ந்துள்ளது.

உயரும் நீர்மட்டம்

 தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லை. நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழைகள் பெய்வது வழக்கம். கடந்த 2 ஆண்டாக இந்த 2 பருவ மழைகளுமே பெய்யவில்லை. இதனால் மாவட்டம் வறட்சியை நோக்கி சென்றது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உண்டானது. கார், பிசான சாகுபடிகளும் நடைபெறவில்லை. மழை பெய்தால் மட்டுமே நிலைமை சீராகும் என்ற நிலை உண்டானது.இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை முழுமையாக பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்தது. அதன்படி மழை பெய்ய தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் 25 அடி உயர்ந்து உள்ளது.இந்த அணையின் உச்சநீர்மட்டம் 143 அடி. கடந்தவாரம் இந்த அணை நீர்மட்டம் 77.50 அடியாக இருந்தது. தொடர்மழையினால் 100.80 அடியானது. இன்று காலை இந்த அணை நீர்மட்டம் 102.20 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 304 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. சேர்வலாறு அணை உச்ச நீர்மட்டம் 156 அடி. இந்த அணை கடந்த வாரம் 90.04 அடியாக இருந்தது. ஒரே வாரத்தில் இது 24 அடி உயர்ந்து 115.80 அடியாக அதிகரித்து உள்ளது. மணிமுத்தாறு அனையின் உச்சநீர்மட்டம் 118 அடி. இந்த அணை நீர்மட்டம் ஒரு வாரத்தில் இந்த அணை 23 அடி உயர்ந்து அணை நீர்மட்டம் 79.85 அடியாக உயர்ந்து உள்ளது. மலைப்பகுதிகளில் தற்போது மழை இல்லாவிட்டாலும் ஏற்கனவே பெய்த மழையினால் நீர்வரத்து மிதமான அளவு உள்ளது. இதனால் நீர்மட்டம் மேலும் சிறிதளவு உயர வாய்ப்பு உள்ளது. இதன் இடையே மழை பெய்ய தொடங்கியது முதலே மாவட்டம் முழுவதும் பிசான சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர். வயல்வெளிகள் நடவுக்காக தயார்படுத்தப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் நடவுப்பணி முடிந்து பயிர்களை பராமரித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதல் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து