முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே: அமைச்சர் சி.வி. சண்முகம் தகவல்

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,  இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே உறுதியாக கிடைக்கும் என்று அமைச்சர் சி.சி சண்முகம் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக இறுதி வாதத்தை தாக்கல் செய்த அவர் இதனை தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கில் தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக நேற்று இறுதி வாதம் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். ஒருங்கிணைந்த அணிகளும், தினகரன் அணியும் நேற்று எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, கட்சியின் பெயர் மற்றும் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அதனைக் கைப்பற்றுவது தொடர்பாக, ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி.தினகரன் அணி இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகிய இரு தரப்பினரும், தனித்தனியே பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து, இரட்டை இலை வழக்கின் விசாரணை கடந்த மாதம் 6ம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெற்றன.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் கடந்த 8ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு சார்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள், தங்கள் தரப்பு வாதங்களைக் கூறி, தங்களுக்கே சின்னத்தை ஒதுக்க வேண்டும் என வாதிட்டனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் நவம்பர் 8ஆம் தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போது ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், முகுல் ரோஹத்கி, சி.எஸ். வைத்தியநாதன் உள்ளிட்டோர், இரட்டை இலை யாருக்கு என்பதை பெரும்பான்மை உறுப்பினர்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்றும், இரட்டை இலையை முடக்க வேண்டும் என்பதிலேயே சசிகலா தரப்பு குறியாக இருப்பதாகவும் வாதிட்டனர்.
 
தேர்தல் ஆணையம் ஒத்திவைப்பு

வாதத்தை கேட்டறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை நிறைவுற்றதாக தெரிவித்தனர். அனைத்து தரப்பினரும் வரும் 13ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

எழுத்துப்பூர்வ வாதம்

இதனிடையே இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கில் தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக நேற்று இறுதி வாதம் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். ஒருங்கிணைந்த அணிகள் சார்பில் அமைச்சர் சி.வி சண்முகம் எழுத்துப்பூர்வ இறுதி வாதத்தை தாக்கல் செய்தார். தினகரன் அணி சார்பிலும் நேற்று எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யப்பட்டது.

 இரட்டை இலை எங்களுக்கே

தேர்தல் ஆணையத்தில் இறுதி வாதத்தினை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சண்முகம், வருமானவரித்துறை சோதனைக்கும் தமிழக அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றார். வருமானவரித்துறைக்கு கிடைத்த தகவலின்படி சோதனை நடைபெற்றது. மேலும் இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்குத்தான் நிச்சயம் கிடைக்கும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து