முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரி மாவட்டத்தில் இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி மாவட்டத்தில் இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில், பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து, கிராம அளவிலான ஆலோசனை குழுக்கூட்டம், கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தெரிவித்ததாவது:-

ஆலோசனை குழுக்கூட்டம்,

 வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் ஒன்றான இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்  2011-ம் ஆண்டு முதல், தமிழ்நாடு முழுவதும், சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2017-2018-ஆம் ஆண்டில், இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 1.50 இலட்சம் பயனாளிகளுக்கு 6 இலட்சம் இலவச வெள்ளாடுகள் வழங்க ரூ.198.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் 308 பயனாளிகளுக்கும், அக்டோபர் மாதத்தில் 536 பயனாளிகளுக்கும், இலவச வெள்ளாடுகள் (தலா 4 வீதம்) வழங்கப்பட்டுள்ளது.  மேலும், இரண்டாம் கட்டமாக, நவம்பர் மாத குறியீடாக  405 பயனாளிகளுக்கு இலவச வெள்ளாடுகள் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதில், தக்கலை மற்றும் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த சடயமங்கலம், ஆத்திவிளை மற்றும் இணையம்புத்தன்துறை ஆகிய கிராமங்களை சார்ந்த 277 பயனாளிகளுக்கும், மீதமுள்ள 128-ல், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஞாலம் ஊராட்சியில் 70 பயனாளிகளுக்கும், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எள்ளுவிளை ஊராட்சியில் 56 பயனாளிகள் என மொத்தம்                                       126 பயனாளிகளுக்கு, இலவச வெள்ளாடுகள் வழங்கப்படவுள்ளது.  மேலும், மூன்றாம்கட்டமாக, ஜனவரி மாதத்தில் 365 பயனாளிகளுக்கும், பிப்ரவரி மாதத்தில் 549 பயனாளிகள் என மொத்தம் 2,543 பயனாளிகளுக்கு இலவச வெள்ளாடுகள்  (தலா 4 வீதம்) வழங்கப்படவுள்ளது என கலெக்டர்  தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.எஸ்.ஜோசப்சந்திரன், உதவி இயக்குநர்கள் மரு.ஆர்.சுவாமிநாதன், மரு.ஆர்.ரிச்சர்டுராஜ், சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர்கள், இரண்டு ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த தனி அலுவலர்கள், ஊராட்சி அளவிலான கூட்ட உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு செயலர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து