முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கோலப்போட்டி கலெக்டர் என்.வெங்கடேஷ் பார்வையிட்டார்

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா,  தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையில், மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் எதிர்வரும் நவம்பர் 22ம் தேதி, கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாக மைதானத்தில், பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

நூற்றாண்டு விழா

நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் வைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டியினையும் கலெக்டர் என்.வெங்கடேஷ்,  தலைமையில்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  (11.11.2017) அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், பழைய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட, பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் உயரிய இலட்சியத்தினையும், சிறப்பினையும் நினைவு கூறும் வகையிலும், புரட்சித்தலைவர் அவர்களின் சாதனைகளை விளக்கும் வகையிலும்,  நாட்டிற்கு ஆற்றிய பணிகள் என பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.அதனை தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான மாவட்ட அளவிலான நடைபெற்ற கோலப்போட்டியினை கலெக்டர் என்.வெங்கடேஷ், , பார்வையிட்டார்கள். பின்னர் கலெக்டர் என்.வெங்கடேஷ்,  தெரிவித்ததாவது:

நமது மாவட்டத்தில் வருகிற 22.11.2017 அன்று பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விழாவினை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான மாவட்ட அளவிலான கோலப்போட்டி நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டிகள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்களுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டமாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வட்டார அளவில் கோலப்போட்டி நடத்தப்பட்டு, முதல் பரிசு பெற்றவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டி நேற்று (13.11.2017) கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் 10 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த மகளிர் குழு கூட்டமைப்புகளும், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி நகராட்சி ஆகியவற்றிலிருந்து தலா ஒரு குழுவும் கலந்து கொண்டன. இப்போட்டியில் வெற்றி பெறும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நமது மாவட்டத்தில் வருகிற 22.11.2017 அன்று நடைபெற உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவில்,  தமிழ்நாடு முதலமைச்சர்  பரிசுகளை வழங்குவார்கள். - என கலெக்டர் என்.வெங்கடேஷ்,  தெரிவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சரவணன், மகளிர் திட்ட இயக்குநர் பி.ஜெ.ரேவதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து