முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 55 ஆக உயர்வு

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      ஈரோடு
Image Unavailable

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை அபரிதமாக அதிகரித்துள்ளதாக மாவட்ட வனஅலுவலர் அருண்லாரி தெரிவித்துள்ளனர்.

தென்னிந்தியாவில் முக்கியமானது சத்தியமங்கலம் புலிகள்  காப்பகம். 1455 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பம், 2013ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி தமிழத்தின் நான்காவது புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புலிகள் எண்ணிக்கை வெறும் 8 ஆக இருந்தது. அதனைத் தொடர்ந்து புலிகள்  பாதுகாக்க குற்றத்தடுப்பு படைகள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு காரணமாக புலிகள் கொல்லப்படுவது தடுத்து 4 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை 55 ஆக உயர்த்தப்பட்டது.

தலமலை, பவானிசாகர், கேர்மாளம் ஆகிய பகுதியில் மனித நடமாட்டம் இல்லாத அதிக நீர்நிலைகள் கொண்ட பகுதி என்பதால் புலிகள் அதிகளவில் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது.  அதிக பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் மொத்தம் 150 புலிகள்  வாழ்வதற்கான சூழல்,காடு ஆகியவை உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

புலிகள் எண்ணிக்கையை கணக்கிட புலிகள் காப்பகத்தை இரு கோட்டங்களாக பிரித்து அதில் 356 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டன. தொடர்ந்து 60 நாள்கள் மேற்கொண்ட ஆய்வில் புலிகள் மொத்தமாக 55 உள்ளதாகவும் அதில் ஆண் புலி 21,  பெண் புலி 32, அடையாளம் காணப்படாத புலி 2 மற்றும் புலிக்குட்டிகள் 11 நடமாடுவது தெரியவந்துள்ளது. இந்த புலிகள் காப்பகத்தில் புலிகள் மட்டுமின்றி சிறுத்தை 111 ம் யானைகள் 752ம் கழுதைப்புலிகள் 42 ம் உள்ளதாக புலிகள் காப்பகத்தின் கள இணை இயக்குநரும் மாவட்ட வனஅலுவலருமாந அருண்லால் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து