முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோள் விழா 6 அமைச்சர்கள் - துணைசபாநாயகர் பங்கேற்று பந்தல்கால் நட்டனர்

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோல் விழா வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில்  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ,  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ,   பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ,   மின்சாரம், மதுவிளக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி ,  கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ,  போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , ஆகிய அமைச்சர் பெருமக்களும்,  சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவிற்கான கால்கோள் விழாவினை தொடங்கி வைத்தனர்.

கால்கோள் விழா

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கோயம்புத்தூரில் வருகின்ற (03.12.2017,ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்காக நவம்பர் மாதம் முழுவதும், டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களை போற்றும் வகையிலும், பொதுமக்களுக்கு அன்னார்  செயல்படுத்திய அளப்பெரிய திட்டங்களையும், நற்செயல்களையும் நினைவுகூறும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றிய அளவில் பள்ளி - கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆகியோருக்கான விளையாட்டு, இலக்கியம், பேச்சு, கட்டுரை, ஓவியம் போட்டிகள், ஓட்டப்பந்தயம், பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், சிறப்பு மருத்துவ முகாம்கள், மற்றும் கண்பரிசோதனை முகாம்கள், கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்கள், மற்றும் திரைப்படவிழா, பட்டிமன்றம், புகைப்படக்கண்காட்சி, பார்போற்றும் கருத்துள்ள  எம்.ஜி.ஆர்  நடித்த திரைபடங்கள் கிராமப்புறங்களில் திரையிடல் என பல்வேறு நிகழ்ச்சிகள்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அறிவுரையின்படி நடத்தப்பட்டு வருகின்றது.

இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும்,  முதலமைச்சர்,  தமிழ்நாடு சட்டப்பேரவதை தலைவர்,  அமைச்சர் பெருமக்கள்  ஆகியோர் பரிசுகளை விழா நாளன்று வழங்கிடவுள்ளார்கள். மேலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள், சான்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். அதுமட்டுமல்லாமல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்  ஏழை எளிய மக்களுக்கு ஆற்றிய அளப்பெரிய நற்செயல்களை நினைவுகூரும் வகையில்  தமிழ்நாடு முதலமைச்சர்  ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்கள். மேலும், பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், எம்.ஜி.ஆர் அரிய வரலாற்று சிறப்புமிக்க புகைப்படங்கள் அடங்கிய புகைப்படக்கண்காட்சிகளும் நடத்தப்படவுள்ளது. பல்வேறு துறைகளின் சார்பில் தங்கள் துறைசார்ந்த திட்டங்கள் மற்றும் திட்டங்களைப் பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ளும் வகையிலான பல்துறை அரசு சாதனை விளக்க அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது.

அதுபோலவே, விழா நாளன்று விழா நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் அதிகளவிலான பேருந்துவசதிகளும், வாகன நிறுத்த வசதிகளும், போதிய அளவிலான இருக்கை வசதிகளும், தண்ணீர் மற்றும் தற்காலிக கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட நிர்வாக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்விழாவில், மாவட்ட கலெக்டர் த.நஹரிஹரன்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், ஆர்.கனகராஜ், கஸ்தூரிவாசு, மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ்,இ.கா.ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பா.மூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன்  மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், சார் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன்  வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, ஆர்.சின்னசாமி மற்றும் அனைத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து