முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகள் பாலியல் கொடுமை செய்யப்படுவதற்கு எதிராக களம் இறங்கும் தாதாவாக சாருஹாசன்

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன் தயாரிக்கும் படம் ‘தாதா 87’. இதில் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன் தயாரிக்கும் படம் ‘தாதா 87’. இதில் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவருடன் கீர்த்திசுரேசின் பாட்டி சரோஜா, நாயகனாக ஆனந்த்பாண்டி, நாயகிகளாக ஜெனி பல்லவி, அனுலாவண்யா நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜனகராஜ், மனோஜ்குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். 

ஒளிப்பதிவு-ராஜபாண்டி, இசை-லியாண்டர் லீ மார்ட்டி, படத்தொகுப்பு-சுதா, கலை-நந்தா, ஸ்டண்ட்- விஜய் ஜாக்குவார். கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம்- விஜய் ஸ்ரீஜி.  படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....

 “சாருஹாசன் இதில் வடசென்னை தாதாவாக நடித்து இருக்கிறார். அவருக்கு இப்போது வயது 87. எனவே இந்த படத்துக்கு ‘தாதா 87’ என்று பெயர் வைத்து இருக்கிறோம். குழந்தைகள் பாலியல் கொடுமை செய்யப்படுவதற்கு எதிராக களம் இறங்கும் தாதாவாக சாருஹாசன் வருகிறார்.

இவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் பாட்டி சரோஜா நடிக்கிறார்.  உடல் நலகுறைவு, வயது எதையும் பார்க்காமல் அர்ப்பண உணர்வுடன் சாருஹாசன் நடித்தார். இளம் நாயகனாக ஆனந்த்பாண்டி நடித்து இருக்கிறார்.

இவருடன் 2 நாயகிகள் நடித்திருக்கிறார்கள். இவருடைய காதல் கதையும், சாருஹாசனின் தாதா கதையும் இணைந்து பயணிக்கும்.  ‘தாதா 87’ படத்தில் இடம் பெற்ற ‘ஆறடி ஆண்டவன்...’ பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றிருக்கிறது.

இன்னும் 2 பாடல்கள் படமாக்கப்பட வேண்டியது உள்ளது. அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இது இருக்கும். ஜனவரியில் ‘தாதா 87’ திரைக்கு வரும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து