முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசூல் பூக்குட்டிக்கு ஷங்கர், ரஹ்மான் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

பாம் ஸ்டோன் மல்டிமீடியா சார்பில் ராஜிவ் பனகல் தயாரித்துள்ள படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’. இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி கதாநாயகனாக நடிக்கிறார்.

படத்திற்கு ராகுல்ராஜ் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். பிரசாத் பிரபாகரன் இயக்குகிறார். இப்படத்தின் கதை திருச்சூரில் வருடா வருடம் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவுகளுடன் இருக்கும் சவுண்டு இன்ஜினியரின் வாழ்க்கை பற்றியது.

இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது. சென்னையில்  நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நாயகன் ரசூல் பூக்குட்டி, இயக்குனர் பிரசாத் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஷங்கர் கூறியதாவது:-

ரசூல் பூக்குட்டி எனது நண்பர். மிகவும் திறமையானவர். அவர் இந்த படத்தில் நாயகனாக நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அதிகம் விரும்புபவன் நான். திருவையாறில் ஆண்டு தோறும் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவை பார்த்து பிரமிப்பானேன்.

அதை படத்தில் பயன்படுத்த எண்ணி அன்னியன் படத்தில் அதை காட்சிப்படுத்தினேன்.அதே போல் திருச்சூர் விழாவை படமாக எடுக்கும் பிரசாத் பிரபாகருக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், ரசூல் பூக்குட்டி, இயக்குனர் பிரசாத் பிரபாகரன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். இந்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்றார்.

இயக்குனர் பிரசாத் பிரபாகரன் பேசுகையில், திருச்சூர் விழாவை படமாக்குவது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு இசைக்கும் ஒரு பரிமாணம் இருக்கிறது. இந்த படம் கண்கள் இல்லாதவர்களுக்கு காதுகளே கண்களாகும் வகையில் உருவாக்கி வருகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து