முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் கே.சி.கருப்பணன் துவக்கி வைத்து விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், அய்யம்பாளையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் தொடர்ச்சியாக கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்  இன்று (19.11.2017) நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்,  தலைமையில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சத்தியபாமா  முன்னிலையில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்  கால்நடை மருத்துவ முகாமினை துவக்கி வைத்து, கால்நடை குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டு பேசினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 14.11.2017 முதல் 20.11.2017 வரை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  புரட்சித்தலைவி அம்மா  வேளாண் தொழிலை மேற்கொண்டுள்ள விவசாய கடன் பெற்ற விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளுக்கு  சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்கடன், நடுத்தர கால வேளாண்மை கடன் மற்றும் பண்ணை சார்ந்த நீண்டகால கடன் என அனைத்தும் தள்ளுபடி செய்துள்ளார்கள். மேலும் மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் மற்றும் விலையில்லா ஆடுகளை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார்கள். 

இன்று துவக்கி வைக்கப்பட்ட கால்நடைகளுக்கான மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி, குடற்புழு நீக்க மருந்துகள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் குறித்த ஆலோசனைகள் போன்றவற்றை வழங்க உள்ளார்கள். எனவே இப்பகுதியை சார்ந்த கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடை இம்மருத்துவ முகாமிற்கு அழைத்து வந்து கால்நடைகளை தேவையான தடுப்பு மற்றும் ஆலோசனைகளை பெற்று தங்கள் வளர்க்கும் கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு   சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்  பேசினார்.

இவ்விழாவிற்கு பொது மேலாளர் /மாவட்ட வருவாய் அலுவலர் (ஆவின்) வே.லதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மு.முருகன் உட்பட கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து