முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தின் நம்பியூர் வருவாய் வட்டத்தினை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டத்தில் 9-வருவாய் வட்டங்கள் செயல்பட்டு வருகிறது. 10-வது வருவாய் வட்டமாக நம்பியூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் தோற்றுவிக்கப்பட்டு அதன் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தலைமையில்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  குத்து விளக்கேற்றி புதிய வருவாய் வட்டத்தை துவக்கி வைத்தார்.

புரட்சித்தலைவி அம்மா  பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள்.  அம்மா அவர்களின் நல்லாசியுடன் நடைபெறும் இந்த அரசு  அறிவித்த அனைத்து திட்டங்களையும் சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நமது தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இனி வரும் காலங்களில் மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு பொதுத்தேர்வுகளையும் சந்தித்து அதில் சாதிக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. மாணவ, மாணவியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற கூடுதல் கட்டணம் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியானது விரைவில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்படவுள்ளது. ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டதன் மூலம் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் கூடுதலாக அரசு பள்ளிகள் மற்றும் பள்ளி கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் மாணவ, மாணவியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் அனைத்து தகவல்களையும் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள வசதியாக      ர்நடி டுiநெ என்ற திட்டமானது விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழ்களை இந்தியாவின் எந்தப்பகுதியில் இருந்தும் இணைதளம்  மூலம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு திட்டப்பணிகளை மிக துரிதமாக மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில் ஈரோடு மேம்பால பணியானது இன்னும் 6 மாதத்திற்குள் விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிடும் வகையில் 543 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் பொழுதே அவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் தொழிற்பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பாடத்திட்டங்களை மாற்றி அமைத்திட 7 நபர் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டங்களை புரிந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக ஆசியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர்  கோபிசெட்டிபாளையம் வட்டம் மற்றும் சத்தியமங்கலம் ஆகிய வட்டங்களை மறு சீரமைத்து புதிய 10-வது வட்டமாக நம்பியூர் வட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி ஆணை வெளிடப்பட்டதைத்தொடர்ந்து இன்று தொடங்கி  வைக்கப்பட்டுள்ளது.

நம்பியூர் பகுதி மக்கள் தங்கள் கோரிக்கைக்காக வட்ட தலைமையிடத்தை அடைய வெகுதூரம் செல்ல வேண்டி இருப்பதாலும், அரசின் நலத்திட்டங்கள் விரைந்து கிடைத்திடவும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும், 27 கிராமங்களுடன் நம்பியூரை தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையிலும் நம்பியூர் வருவாய் வட்டமானது உருவாக்கப்பட்டுள்ளது. நம்பியூர் வட்டம் புதிதாக உருவாக்கப்படும்போது கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் 9 கிராமங்களுடன் வேமாண்டம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய குறுவட்டம் உருவாகும். மேலும் கோபிசெட்டிபாளையம் வட்டம் காசிபாளையம் உள்வட்டத்தில் உள்ள கடத்தூர் கிராமத்தை புதிதாக உருவாக்கப்படும் நம்பியூர் வட்டத்தின் எலத்தூர் உள்வட்டத்தில் சேர்ப்பதால் காசிபாளையம் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை 6-ல் இருந்து 5 ஆக குறையும். கோபிசெட்டிபாளையம் உள்வட்டத்தில் மொத்தம் உள்ள 15 கிராமங்களில் அளுக்குளி-அ,அளுக்குளி-ஆ, சோழமாதேவிக்கரை, கோட்டுப்புள்ளாம்பாளையம் ஆகிய 4 வருவாய் கிராமங்களை காசிப்பாளையம் உள்வட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

நம்பியூர் வட்டத்தில் 27 கிராமங்கள் மட்டுமே இருப்பினும், இவற்றில் அடங்கியுள்ள  6 ஆ வகை கிராமங்களையும் சேர்த்து 33 கிராமங்கள் உள்ளது. உத்தேசிக்கப்பட்ட நம்பியூர் வட்டத்தில் உள்ள 4 கிராமங்கள் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளபோதும் இவை நம்பியூர் வட்ட தலைமையிடத்திற்கு அருகில் உள்ளதால் பொதுமக்கள் எளிதாக அணுக இயலும். எனவே பொதுமக்கள் நலன் கருதி புதிதாக நம்பியூர் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக தோற்றுவிக்கப்படும் நம்பியூர் வட்டத்திற்கு 16 பணியிடங்கள் மறுபரவலமர்த்தல் மூலமும், 27 பணியிடங்கள் புதிதாக உருவாக்கியும் ஆக மொத்த 43 பணியிடங்கள், தொடர் செலவினமாக ரு.58,76,100/- மதிப்பிலும், தொடரா செலவினமாக ரூ.18,36,000/- மதிப்பிலும் புதிதாக ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தேவையறிந்து அவற்றை நிறைவேற்றித்தருகின்ற அரசுக்கு உறுதுணையாக இருப்பதோடு, அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளை பெற்று தங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, கோபி வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து