முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்ல மகளின் பிறந்தநாளை கொண்டாடிய ஐஸ்வர்யாராய்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2017      சினிமா
Image Unavailable

மும்பை,  ஐஸ்வர்யா ராய் தனது செல்ல மகள் ஆராத்யாவின் 6வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவுக்கு 6வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முந்தைய ஆண்டுகள் ஆராத்யாவின் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடினர். இந்த ஆண்டு ஆராத்யாவின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளனர்.

ஆராத்யாவின் பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்களுக்கு விருந்து கொடுக்கப்பட்டது. பிரபலங்கள் தங்களின் குழந்தைகளுடன் வந்து ஆராத்யாவை வாழ்த்தினர்.

நடிகர் ஷாருக்கான் தனது இளைய மகன் ஆப்ராமுடன் வந்து ஆராத்யாவின் விருந்தில் கலந்து கொண்டார். குழந்தைகளை பார்த்ததும் ஆப்ராம் குஷியாகிவிட்டார்.

ஐஸ்வர்யா தனது மகளை மாமியார் ஜெயாபச்சன் அருகில் செல்லவிடாமல் பார்த்துக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பார்ட்டியில் ஆராத்யா ஜெயாபச்சன் பாட்டிக்கு கேக் ஊட்டிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது மகன் வியான் மற்றும் தாயுடன் வந்து ஆராத்யாவை வாழ்த்தினார். பல திரையுலக பிரபலங்கள் விருந்துக்கு வந்திருந்தனர்.

தனது பிறந்தநாள் அன்று அம்மா கொடுத்தவிருந்தை பார்த்து ஆராத்யா மகிழ்ச்சி அடைந்துள்ளார். தாயும், மகளும் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து