முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினிகாந்த்

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, தங்கும் விடுதிகள் கட்ட ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடியை நடிகர் ரஜினிகாந்த் நன்கொடையாக வழங்கினார்.

நடிகர் ரஜினிகாந்த் ராக வேந்திரராவின் தீவிர பக்தர். இந்த நிலையில், ரஜினிகாந்த் நேற்று முன்தீனம்க ர்நாடகா - ஆந்திர எல்லையில் உள்ள மந்திராலயம் ஸ்ரீராக வேந்திரர் சாமி கோவிலுக்கு சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து வர வேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று ராகவேந்திரர் சாமியை பயபக்தியுடன் வழிபட்டார். அங்கு சிறிது நேரம் அமைதியாக இருந்து தியானம் செய்தார்.

பின்னர் ராகவேந்திரர் கோவில் மடாதிபதி சுபதேந்திர தீர்த்தசாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அங்கும் ரஜினிக்கு மடம் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. மடாதிபதியுடன் ரஜினி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது ராகவேந்திரர் கோவில் மிகவும் பழமையாகிவிட்டது பற்றியும், பக்தர்கள் தங்க விடுதிகள் தேவை என்பது பற்றியும் கேட்டு அறிந்தார். இதையடுத்து ரஜினிகாந்த் மந்திராலயம் ராகவேந்திரர் கோவிலுக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கினார். இதன்மூலம் இங்குள்ள ராகவேந்திரர் கோவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதுதவிர 25 ஏ.சி. தங்கும் விடுதிகள் கட்டப்படுகிறது. மேலும் பக்தர்கள் தங்கு வதற்காக 100 புதிய அறைகள் கட்டப்படுகின்றன. ரஜினி கொடுத்த நன்கொடை மூலம் இந்த பணிகள் நடை பெற உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து