முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் நடைபெற்ற கூட்டுறவு விழாவில் அமைச்சர் கே.சி.கருப்பணன், சத்யபாமா எம்.பி பங்கேற்பு

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் உள்ள ஈடி.584 அய்யம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 64 ஆவது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவினை முன்னிட்டு இலவச கால்நடைசிகிச்கை முகாம் நடத்தப்பட்டது.  இம்முகாமிற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ். பிரபாகர் தலைமை தாங்கினார். 

சுற்றுச்சூழல்துறை அமைச்சர்.கே.சி. கருப்பணன் இலவச கால்நடைசிகிச்சை முகாமினை துவக்கி வைத்து விழாப் பேருரையாற்றினார்கள்.  அவர்தம் உரையில் கூட்டுறவின் மூலம் பல்வேறு நல்ல திட்டங்களை  அம்மா அவர்களின் அரசு செயலாற்றி வருகிறது.  கால்நடைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இன்று அய்யம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இலவச கால்நடைசிகிச்சை முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   அம்மா அவர்களின் அரசு தமிழக மக்களுக்கு விலையில்லா அரிசி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் போன்ற நலத்திட்டங்களை வழங்கி விவசாயிகளின் பொருளாதார மேம்பாடு அடையசெய்துள்ளது.  கிராமப்புறத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறை மூலம் பல்வேறு விதமான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  அதனை பயன்படுத்தி உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தி நமது அரசுக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

இவ்விழாவில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர். வி. சத்தியபாமா கூட்டுறவு வாரவிழாக்குழுத் தலைவரும், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான.என். கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இவ்விழாவில் ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்.மு. முருகன் , ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மாவட்ட வருவாய் அலுவலர் /பொதுமேலாளர். வே. லதா ஈரோடு மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூடத்தின் தலைவர் எஸ்.எஸ். சித்தையன் , கோபி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் இரா. தியாகராஜன் ,ஈரோடு பால்வள துணைப்பதிவாளர்.ந. இளங்கோவன் ஈரோடு ஆவின் துணை பொது மேலாளர் டாக்டர். கே.பி. தேவராஜன் அய்யம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்.ஏ.எம். இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னதாக கூட்டுறவு வாரவிழாக் குழு துணைத்தலைவரும், ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவருமான வி. தெய்வநாயகம் வரவேற்றார்.  ஈரோடு ஆவின் விரிவாக்க அலுவலர் எம். செல்வி நன்றி கூறினார்.  இம்முகாம் கூட்டுறவு வாரவிழாக்குழு, ஈரோடு ஆவின் மற்றம் கிரிப்கோ இணைந்து இந்த இலவச கால்நடை சிகிச்சை முகாமினை நடத்தியது.  ஈரோடு ஆவின் நிறுவனமும், கிரிப்கோ நிறுவனமும் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை இலவசமாக வழங்கியது.  மேலும் இம்முகாமில் சிறந்த உறுப்பினர்களுக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து