முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக வழக்கு: டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது

வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2017      சினிமா
Image Unavailable

புதுடெல்லி, பத்மாவதி திரைப்படத்தை வரலாற்று பேராசிரியர்கள் முன்னிலையில் திரையிட்டு ஒப்புதல் பெற்ற பின்னரே வெளியிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறு திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பா.ஜ.க, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

திரைப்படம் திரையிட தயாராகி வரும் நிலையில், அப்படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கலாகின. ஆனால்  அவற்றை  சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி  செய்துவிட்டது
இந்நிலையில், பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதில் ‘‘பத்மாவதி திரைப்படத்தை சென்சார் போர்டு தவிர, தலைசிறந்த மூன்று பல்கலைகழக வரலாற்று பேராசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் திரையிட வேண்டும். அவர்களின் ஒப்புதலுக்கு பிறகே பத்மாவதி படத்தை திரையிட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பத்மாவதி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள தகவல்கள் தெரியாமல் முன்கூட்டியே இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது எனக்கூறி உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து